கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி விழா 

 

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்க தேர் பவனி விழா 

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த விழாவில் இன்று தேர் பவனி  நடைபெறுகிறது.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சிறப்பு வாய்ந்த கத்தோலிக்க ஆலயம் புனித அலங்கார உபகார மாதா திருத்தலம் ஆகும். இந்த ஆலயம் ரோமிய கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. இத்திருத்தலத்தில் தங்கப் பீடத்தில் அலங்கார மாதாவின் அற்புத சுருபத்தை அமைத்துள்ளனர். 

kanyakumari

இந்த ஆலயத்தில் பல்வேறு அற்புதங்கள் நடைபெற்று உள்ளது. உள்நாட்டிலிருந்து மட்டுமன்றி பல்வேறு நாடுகளிலிருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இத்திருத்தலத்தில் பெருவிழா ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது .

kanyakumari

8 ஆம் திருவிழாவான நேற்று அதிகாலை பழைய கோயிலில் திருப்பலியும், அதை தொடர்ந்து திருப்பலி திரு இருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும், சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் நடைபெற்றது.

நேற்று மாலையில் ஜெபமாலை திருப்பலியும், மறை மாவட்ட பொருளாளர் அலாய்சியஸ் தலைமையில் புதூர் பங்கு பணியாளர் சாம் மேத்யு மறையுரையும் ஆற்றினார். இரவு சப்பர பவனி நடந்தது.

9-ம் திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு பழைய கோயிலில் திருப்பலி நடக்கிறது. இன்று மாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி முன்னாள் பங்கு தந்தை லியோன் எஸ்.கென்சன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 9 மணிக்கு புனித சூசையப்பரின் தங்க தேர் பவனியும் நடைபெறுகிறது.