கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரனா தொற்று இல்லை!

 

கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரனா தொற்று இல்லை!

நேற்று 2 வயது குழந்தை உட்பட அடுத்தடுத்து 3 பேர் உயிழந்தனர். அதே போல இன்று காலையும் மற்றுமொரு நபர் உயிரிழந்தார்.

தமிழகத்தில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா அறிகுறி இருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்காக தனிவார்டு  அமைக்கப்பட்டு, கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

ttn

அதனைத்தொடர்ந்து நேற்று 2 வயது குழந்தை உட்பட அடுத்தடுத்து 3 பேர் உயிழந்தனர். அதே போல இன்று காலையும் மற்றுமொரு நபர் உயிரிழந்தார். அதனால் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக உயிரிழந்த 3 பேரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து நேற்று உயிரிழந்தவர்களின் ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று உயிரிழந்த மூன்று பேரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என்று தமிழக மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.