கன்னட நடிகரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான அம்பரீஷ் காலமானார்!

 

கன்னட நடிகரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான அம்பரீஷ் காலமானார்!

கன்னட நடிகரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான அம்பரீஷ், உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.அவருக்கு வயது 66.

பெங்களூரு: கன்னட நடிகரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான அம்பரீஷ், உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.அவருக்கு வயது 66.

கன்னட திரையுலகில் பிரபல நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் அம்பரீஷ். தமிழ், இந்தி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார். தமிழில் வெளியான ப.பாண்டி என்ற படத்தின் கன்னட ரீமேக்கான ‘அம்பி நிங் வயஸ்சேய்தோ’ என்ற படமே அவருடைய கடைசிப் படமாகும்.

மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகப் பணியாற்றிய இவர் காவிரி விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். சித்தராமையா தலைமையிலான மாநில அரசிலும் அமைச்சராக அம்பரீஷ் பணியாற்றியுள்ளார். இவரின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது.