கன்னடத்தில் வெளியாகும் தல அஜித்தின் விஸ்வாசம்!

 

கன்னடத்தில் வெளியாகும் தல அஜித்தின் விஸ்வாசம்!

தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்

சென்னை: தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகிய விஸ்வாசம் திரைப்படம் கடந்த 10ம் தேதி  உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.குடும்ப படமான ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. படம் வெளியாகி 25 நாளாகிய நிலையில் இன்னும் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு வருகிறது.

கர்நாடகத்திலும் பொங்கல் அன்று தமிழ்மொழியிலேயே வெளியிடப்பட்ட விஸ்வாசம் தல ராசைகர்களிடேயே  நல்ல வரவேற்பை பெற்றதால் கர்நாடகா விநியோகஸ்த உரிமையை வாங்கிய அதே விநியோகஸ்தர் தற்போது படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘ஜகா மல்லா’ என்ற பெயரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

viswasam

அப்படத்தின் டப்பிங் வேலைகள் முடிந்தவுடன் கன்னடத்தில் வெளிவரும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னட மக்களையும் இப்படம் ஈர்க்கக் கூடும் என்பதால் படத்தை டப் செய்து வெளியிட எண்ணத்தில் படத்தை டப் செய்து இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.