கனிமொழி -ஆ.ராசாவுக்கு கண்டம் ஸ்டார்ட்… கிலியடித்துக் கிடக்கும் திமுக புள்ளிகள்..!

 

கனிமொழி -ஆ.ராசாவுக்கு கண்டம் ஸ்டார்ட்… கிலியடித்துக் கிடக்கும் திமுக புள்ளிகள்..!

ஆ.ராசாவை நாடாளுமன்றத்தை நடத்தும் பெருமை மிகு நாற்காலியில் உட்கார அனுமதிக்க மாட்டோம். இந்த வழக்கின் தீர்ப்பானது சி.பி.ஐ-க்கு சாதமாக வந்துவிட்டால், தி.மு.க.வின் ஆட்டம் முடிந்தது என கொக்கரிக்கின்றனர்.

கனிமொழி -ஆ.ராசாவுக்கு கண்டம் ஸ்டார்ட்… கிலியடித்துக் கிடக்கும் திமுக புள்ளிகள்..!

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வளைத்துக் கட்டி வெற்றி பெற்று, இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக விஸ்வரூபமெடுத்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஒரு பிராந்தியக்கட்சி இப்படி பிரம்மாண்டமானதை பார்த்து அதிர்ந்தது அகில இந்தியா. ஆனால் ஐந்து ஆண்டுகள் கழித்து, ஸ்டாலின் தலைமையில் அதே சாதனையை செய்திருக்கிறது தி.மு.க. அன்று அ.தி.மு.க. இருந்த அதே நிலையை தி.மு.க. பிடித்திருக்கிறது இன்று.

அதிக எம்.பி.க்கள் வைத்திருக்கும் கட்சி எனும் அடிப்படையில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவிக்கு தி.மு.க.விலிருந்து ஒரு நபரை கேட்டபோது, ஆ.ராசாவை முன்மொழிந்தது அக்கட்சி. சபாநாயகர் அரியணையில் அமர்ந்த ராசாவும், பி.ஜே.பி. எம்.பி.க்களே பாராட்டும் வண்ணம் மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார், அவையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

கடந்த முறை தம்பிதுரை இருந்தது போல் இந்த முறை அந்த அதிகாரம் ராசாவுக்கு வழங்கப்படலாம், இதன் மூலம் பி.ஜே.பி.யுடன் தி.மு.க.வுக்கு பெரும் நெருக்கம் ஏற்படலாம்! என்று பிற எதிர்க்கட்சிகள் பொறாமையில் பொசுங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அவர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது… “ராசா, கனிமொழி ஆகியோரின் விடுதலையை எதிர்த்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் ஆகஸ்ட் 24-ம் தேதியன்று முதல் விசாரணைக்கு வருகிறது.” என்பதுதான்.

என்னதான் காங்கிரஸ் அதிரிபுதிரியாக வென்று, அரசமைத்து, தங்களுக்கு மத்தியமைச்சர் பதவி கிடைக்கும்!…என எல்லா கனவுகளும் பொய்த்துப் போனாலும் கூட டெல்லியில் தி.மு.க. பெரியளவில்தன் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த ஆட்டத்துக்கு ஒரு செக் வைக்கும் விஷயமாகவே இந்த அறிவிப்பை பார்க்கின்றனர் எதிர்க்கட்சிகள்.

ஆ.ராசா, கனிமொழி ஆகியோரின் விடுதலைக்கு எதிரான இந்த வழக்கை விரைந்து கையிலெடுக்க வேண்டும்! என்று சி.பி.ஐ. சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனர, சஞ்சய் ஜெயின், உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஏற்க டில்லி ஹைகோர்ட் மறுத்துவிட்டது. 

அதேவேளையில் “ஏற்கனவே அறிவித்தபடி இந்த வழக்கானது வரும் 24-ம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அனைத்து தரப்பும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.” என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதைத்தான் டெல்லியில் தி.மு.க.வின் அதிவிரைவான வளர்ச்சியை விரும்பாத கட்சிகள் கொண்டாடுகின்றனர். வழக்கு விசாரணை துவங்கிவிட்டால், ஆ.ராசாவை நாடாளுமன்றத்தை நடத்தும் பெருமை மிகு நாற்காலியில் உட்கார அனுமதிக்க மாட்டோம். இந்த வழக்கின் தீர்ப்பானது சி.பி.ஐ-க்கு சாதமாக வந்துவிட்டால், தி.மு.க.வின் ஆட்டம் முடிந்தது என கொக்கரிக்கின்றனர்.

அதே நேரத்தில் தி.மு.க.வின் ரியாக்‌ஷன் என்ன?…..இந்த வழக்கிலும் நிச்சயமாக தங்களின் நியாயத்தை நிரூபித்து வெல்வோம், விடுதலையை மறு உறுதி செய்வோம்! என்று சூளுரைக்கின்றனர். ஆனாலும் தி.மு.க. எம்.பி.க்களுக்கு இயல்பாகவே உள்ளூர ஒரு பயம், கிலி இருக்கத்தான் செய்கிறது.
இருக்காதா பின்னே!?