கனிமொழிக்கு எதிரான வழக்கு: பின் வாங்கிய தமிழிசை

 

கனிமொழிக்கு எதிரான வழக்கு: பின் வாங்கிய தமிழிசை

தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்றியதால் கனிமொழியின் மீதான வழக்கை தொடர விருப்பப் படவில்லை எனக் கூறி தமிழிசை அந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். 

மக்களவை தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க சார்பாக கனிமொழியும், காங்கிரஸ் சார்பாக தமிழிசையும் போட்டியிட்டனர்.

Kanimozhi

அந்த தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்றார். இந்நிலையில், சிங்கப்பூர் குடிமகனான கனிமொழியின் கணவர் அரவிந்தனின் வருமானத்தை வேட்பு மனுவில் குறிப்பிடாததால் கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி உயர்நீதி மன்றத்தில் தமிழிசை  வழக்கு பதிவு செய்தார். 

Thamizhisai

அந்த வழக்கிற்கு பதிலளிக்க கனிமொழிக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்றியதால் கனிமொழியின் மீதான வழக்கை தொடர விருப்பப் படவில்லை எனக் கூறி தமிழிசை அந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். 

இருப்பினும், இந்த வழக்கை தொடர்வது குறித்து அக்டோபர் 14 ஆம் தேதி தெரிவிக்கப்படும் என்று உயர்நீதி மன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.