“கனவுத்திட்டமான சந்திராயன்-2 நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை” : டிடிவி தினகரன் ட்வீட்!

 

“கனவுத்திட்டமான சந்திராயன்-2 நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை” : டிடிவி தினகரன் ட்வீட்!

நிலவில் தரையிறங்காத விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை நாசா வெளியிட்டது. அந்த புகைப்படங்களைச் சுப்பிரமணியன் ஆய்வு செய்ததில்,  விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருப்பதாக நாசாவிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் சென்னை தரமணியில் லினக்ஸ் கணினி நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நிலவில் தரையிறங்காத விக்ரம் லேண்டரின் புகைப்படங்களை நாசா வெளியிட்டது. அந்த புகைப்படங்களைச் சுப்பிரமணியன் ஆய்வு செய்ததில்,  விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருப்பதாக நாசாவிற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதற்கு நாசா ,அவர் கூறியதன் படி அது விக்ரம் லேண்டரின் பாகம் தான் என்று கூறி அவருக்குப் பாராட்டு தெரிவித்து பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இவருக்கு பலதரப்பினர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

subramnai

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த இளைஞருக்கு வாழ்த்து தெரிவித்தும் சந்திராயன்-2  திட்டம் நனவாகும் நாள்  வெகு தூரம் இல்லை என்றும் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில், ” சந்திராயன் 2 விண்கலத்துடன் அனுப்பப்பட்டு, கடைசி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டரைக் கண்டறிவதில் முக்கிய பங்காற்றிய தமிழகப் பொறியாளரான மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன் அவர்களை மனமார வாழ்த்துகிறேன். இதற்காக அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா அவரைப் பாராட்டி இருப்பது பெருமிதம் தருகிறது. தமிழக விஞ்ஞானிகளின் சிறப்பான பங்களிப்போடு முன்னெடுக்கப்பட்ட இந்தியாவின் கனவுத்திட்டமான சந்திராயன் 2, நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை இந்நிகழ்வு அளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.