கனவுகளின் பலன்களும் அதன் விளைவுகளும்

 

கனவுகளின் பலன்களும் அதன் விளைவுகளும்

கனவுகளும் அதன் பலன்களை பற்றியும் கனவு சாஸ்திரம் கூறும் வழிமுறைகளை பற்றியும் இந்த பதிவில் மிகவும் விரிவாக பார்போம்.

மனதின் வெளிப்பாடுகள் தான் கனவுகள் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.எந்த கனவுகளும் விருப்பத்திற்கு உட்பட்டு வருபவை அல்ல.அவை தன்னிச்சையாக நிகழும் மனதின் உள்ளுணர்வு வெளிப்பாடுகள் ஆகும்.கனவுகள் அனைத்திற்கும் பலன்கள் உண்டு ஆனால் அவை யாராலும் அறியப்படாதவை.நல்ல கனவுகளைக் கண்டால் என்றுமே உறக்கம் வராது.அதுபோல தீய கனவுகளைக் கண்டால் கடவுளை வணங்கிவிட்டு உறங்குவது நல்லது.

dreams

இன்றைக்கும் கோத்தகிரி,ஊட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் படுக இன மக்கள் பாம்பை உடலின் மீது ஊர்ந்து செல்ல வைத்து தோஷ சாந்தி செய்கின்றனர்.எனவே,பாம்பு ஒருவர் மீது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால்,அவருக்கு இருந்த கண்டம் அல்லது கெட்ட நேரம் விலகிச் சென்று விட்டதாகக் கருதலாம்

கருத்தரித்திருக்கும் பெண்மணி கனவில் தாமரை மற்றும் வெள்ளை நிற மலர்கள்,பழங்கள் முக்கியமாக மாம்பழம் அல்லது மாங்காய் போன்றவை வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என பலன் கொள்ளலாம்.செம்பருத்தி,ரோஜா மலர்கள்,வாழைப்பழம் கனவில் வருவது பெண் குழந்தை பிறப்பை உறுதி செய்யும் ஒன்றாகும்.

கனவில் தெய்வங்கள்,பிராமணர்கள்,உயிருள்ள காளை அல்லது பசு மாடு, கோவில்,சர்ச்,மசூதியில் பூஜை செய்பவர்கள்,நீர் நிலைகள்,எறியும் நெருப்பு போன்றவை தோன்ற உடல் நிலை முன்னேற்றம் மற்றும் இருக்கும் நோய்கள் விலகப்போவதின் அறிகுறியாக எடுத்து கொள்ளலாம்.

dreaam

மேற்கண்டவை அசுத்தமான சூழலில் தென்பட்டால், அழுக்குடைகளுடன் அல்லது அசுத்தமான நீர் நிலை, இறந்த காளை அல்லது பசு, இடிந்த நிலையில் தெய்வீக இடங்கள் போன்றவையாக இருப்பின் உடல் தீங்கு பெரும் நோய் நேர்வதற்கான அறிகுறி.

பொதுவாக உறங்க ஆரம்பித்தவுடன் முதல் 2 மணி நேரத்தில் வரும் கனவுகள் ஒரு வருடத்திலும்,அடுத்த இரண்டு மணி நேரத்திலும் மற்றும் மதிய நேரத்தில் உறங்குவோருக்கும் வரும் கனவுகள் அடுத்த ஆறு மாதத்திற்குள்ளும் அடுத்த இரண்டு மணி நேரத்தில் வரும் கனவுகள் மூன்று மாதத்திலும் கடைசி அதிகாலை கனவுகள் பத்தே நாட்களில் நடந்தேறும் என்கிறது ஹரித சம்ஹிதை .

சுப சொப்பனங்கள் பசு, எருது,யானை தேவாலயங்கள, அரண்மனை,மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம்,தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல்,ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல்,வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம்,அகில்,வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும். வெண்ணிறப் பாம்பு கடித்தல் தேள் கடித்தல் சமுத்திரம் தாண்டல்,நெருப்பில் அகப்படுதல், கட்டுப்படல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு.பகலில் காணும் கனவுக்கு பலனில்லை.

dreeaki

இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது.குறிப்பாக,பேரன்,பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி என கருத வேண்டும்.ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும் என்று பல்வேறு நூ ல்களில் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.