கனரக வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு 8 ஆம் வகுப்பு தகுதி தேவையில்லை!

 

கனரக வாகன ஓட்டுநர் உரிமத்திற்கு 8 ஆம் வகுப்பு தகுதி தேவையில்லை!

கனரக வாகனங்களை இயக்க ஓட்டுனர் உரிமம் பெற 8 ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பொதுவாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 50 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 50 சி.சி.க்கு அதிகமான மற்றும் நான்கு சக்கர வாகன (எல்.எம்.வி – இலகு ரக வாகனம்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். அதுபோல  பேருந்து, லாரி போன்ற கனரக வாகனம் (ஹெச்எம்வி-ஹெவி மோட்டார் வெஹிக்கிள்) ஓட்டுநர் உரிமம் பெற  இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

கனரக ஓட்டுநர் உரிமம்

அத்துடன் கல்வித் தகுதி 8-ம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சொந்த பயன்பாட்டுக்காக கனரக வாகனம் ஓட்டுபவர், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவை இல்லை என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.