கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு!

 

கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு!

சுற்றியுள்ள பகுதியில் கனமழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன் படி, நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. அதே போல சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இந்நிலையில் குற்றலாம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கனமழை பெய்ததால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ttn

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவியில், எல்லா வருடமும் ஜூன் முதல் ஆகஸ்ட்  வரை சீசன் தொடங்கும். இந்த மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில், பாதுகாப்பு தடுப்புகளையும் தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.