கனடா டி20: சிக்ஸர் அடித்து கண்ணாடி தெறிக்கவிட்ட கிரிக்கெட் வீரர்! 

 

கனடா டி20: சிக்ஸர் அடித்து கண்ணாடி தெறிக்கவிட்ட கிரிக்கெட் வீரர்! 

உலக கோப்பையில் படுமோசமாக சொதப்பிய பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் ஷோயப் மாலிக், கனடா டி20 லீக்கில் சிக்ஸர் அடித்து கண்ணாடியை தெறிக்கவிட்டார். 

உலக கோப்பையில் படுமோசமாக சொதப்பிய பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் ஷோயப் மாலிக், கனடா டி20 லீக்கில் சிக்ஸர் அடித்து கண்ணாடியை தெறிக்கவிட்டார். 

ஷோயப் மாலிக் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் டக் அவுட்டானார். இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டார். டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்  கனடா டி20 லீக்கில் ஆடிவரும் மாலிக், வான்கூவர் நைட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார். இந்த லீக் தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் வான்கூவர் நைட்ஸ் அணியும் ப்ராம்ப்டன் வால்வ்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ஷோயப் மாலிக், சிக்ஸர் அடித்து இரண்டு கண்ணாடிகளை உடைத்தார். 26 பந்துகளில் 46 ரன்களை குவித்த மாலிக், 3 சிக்ஸர்கள் விளாசினார். அதில் இரண்டு சிக்ஸர்கள் ஸ்டேடியத்தில் இருந்த கண்ணாடிகளை பதம்பார்த்தது. மாலிக் அடித்த 2 சிக்ஸர்களாலும் 2 கண்ணாடிகள் உடைந்தன.