கனடாவில் வேட்டி சட்டையில் நடிகர் விஜய் மகன்…வைரல் போட்டோஸ்!

 

கனடாவில் வேட்டி சட்டையில் நடிகர் விஜய் மகன்…வைரல் போட்டோஸ்!

 படிப்படியாக முன்னேறிய தளபதி விஜய்க்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது அவரது மனைவி சங்கீதா.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் தளபதியாக இருக்கிறார். ஆண்டுக்கு ஒருபடம் கொடுத்தாலும் அவரின் கிரேஸ் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. வெற்றி, தோல்வி என வாழ்க்கையில்  படிப்படியாக முன்னேறிய தளபதி விஜய்க்கு எப்போதும் உறுதுணையாக இருப்பது அவரது மனைவி சங்கீதா.

ttn

முன்னணி நடிகராக இருந்த காலகட்டத்தில் அதாவது  1999ம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு சஞ்சய் ஜேசன் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். 

ttn

விஜய்யின் மகன் சஞ்சய், சமீபத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து ஃபிலிம் மேக்கிங்கில் ஆர்வம் காட்டி வரும் சஞ்சய், தனது நண்பர்களுடன் இணைந்து முதல் முயற்சியாக குறும்படம் ஒன்றை இயக்கி நடித்திருந்தார். அப்பாவை போலவே அலட்டிக் கொள்ளாமல் நடித்திருப்பதாக சஞ்சய்க்கு பாராட்டுக்கள் குவிந்தன.  இதையடுத்து கல்லூரி படிப்பிற்காக சஞ்சய் கனடா சென்றுவிட்டார் . 

rrttn

இந்நிலையில்  கனடாவில் தனது கல்லூரியில் சஞ்சய் நேற்று குடியரசு தினத்தை கொண்டாடியுள்ளார். அதில் வேட்டி சட்டை,  தேசிய கொடியை நெஞ்சில் குத்திவாறு ஸ்மார்ட்டாக இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சஞ்சய் படிப்பு முடிந்து சென்னை  திரும்பியதும் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.