‘கத்துனா போதும் கதைய முடிச்சிடும்’: சிறுமியின் குரலுக்கு கட்டுப்படும் பறவை; வைரல் வீடியோ!

 

‘கத்துனா போதும் கதைய முடிச்சிடும்’: சிறுமியின் குரலுக்கு கட்டுப்படும் பறவை; வைரல் வீடியோ!

தனது பாதுகாப்பிற்கு  பறவைக்கு சிறுமி ஒருவர் வினோத பயிற்சி அளித்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

தனது பாதுகாப்பிற்கு  பறவைக்கு சிறுமி ஒருவர் வினோத பயிற்சி அளித்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

baby

சமீபகாலமாக சமூகவலைதளங்களில் குழந்தைகளின் சுட்டிதனங்களான  வீடியோக்கள்  வைரலாவது வழக்கமாகி வருகிறது. அப்படிதான் ‘எனக்கு சாப்பாடு தான்  முக்கியம்’, குணமா வாயில சொல்லணும் போன்ற வீடியோக்கள் வெளியாகி அந்த வீடியோக்களில் வந்த குழந்தைகள் ஒரே நாள் இரவில் ஹீரோவானார்கள். 

 

அந்த வகையில்  லார்ட்  ஃப்லொக்கோ என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில்  வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் கத்தியவுடன் கிளி ஒன்று பறந்து வந்து எதிராளியை தாக்குவது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது. இதை பதிவிட்டதுடன், ‘என்னுடைய சகோதரர் மகள் அவள் வளர்க்கும் பறவையை தான் கத்தினால் மற்றவர்களை தாக்க பயிற்சி அளித்து வைத்திருக்கிறாள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

baby

பறவைகளை செல்லமாக வளர்த்து அதை அழகாக பராமரித்து பாதுகாத்து வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் தன்னுடைய பாதுகாப்பிற்காக இப்படி ஒரு வினோத பயிற்சி கொடுத்துள்ள அந்த சிறுமியை கண்டு பலரும் வியந்து வருகின்றனர். இந்தப் பெண்ணுக்கு பவர் உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.  இந்த  வீடியோவை இதுவரை 20 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.