கத்தி கத்தி தொண்டை வறண்டு போன போலிஸ் ! மீம்ஸ் போட்டு விழிப்புணர்வு !

 

கத்தி கத்தி தொண்டை வறண்டு போன போலிஸ் ! மீம்ஸ் போட்டு விழிப்புணர்வு !

தீபாவளி சமயத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் தூத்துக்குடி போலீசாரை தொடர்ந்து திண்டுக்கல் போலீசாரும் மீம்ஸ் போட்டு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது தீபாவளி சமயம் என்பதால் பொதுமக்கள் தங்கள் போனஸ் பணத்தை எடுத்துக்கொண்டு துணிகள், உள்ளிட்ட பொருட்கள் வாங்க கடை கடையாக ஏறி இறங்குகின்றனர். அப்படி செல்லும்போது வழியில் டீ சாப்பிடுவது உள்ளிட்ட விஷயங்களுக்காக பணம் கொடுக்கும்போது திருடர்கள் கவனித்து விடுகின்றனர்.

தீபாவளி சமயத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் தூத்துக்குடி போலீசாரை தொடர்ந்து திண்டுக்கல் போலீசாரும் மீம்ஸ் போட்டு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

meme

தற்போது தீபாவளி சமயம் என்பதால் பொதுமக்கள் தங்கள் போனஸ் பணத்தை எடுத்துக்கொண்டு துணிகள், உள்ளிட்ட பொருட்கள் வாங்க கடை கடையாக ஏறி இறங்குகின்றனர். அப்படி செல்லும்போது வழியில் டீ சாப்பிடுவது உள்ளிட்ட விஷயங்களுக்காக பணம் கொடுக்கும்போது திருடர்கள் கவனித்து விடுகின்றனர். பின்னர் அவர்கள் பின்னாலேயே சென்று கூட்ட நெரிசலில் பணத்தை ஆட்டை போட்டுவிடுகின்றனர். இதை என்னதான் மைக் போட்டு போலீசார் தொண்டை தண்ணி வற்ற கத்து கத்து என்று கத்தினாலும், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் சிலர் தினமும் பணத்தை இழந்து கொண்டுதான் இருக்கின்றனர். 

எனவே பொதுமக்களுக்கு நகைச்சுவை நடிகர்கள் மூலம் மீம்ஸ் போட்டால் அதை ரசிப்பது மட்டும் அல்லாமல் எச்சரிக்கையுடன் இருப்பார்கள் என நினைத்த போலீசார் அதற்கான வேலையில் இறங்கி உள்ளனர். ஏற்கனவே தூத்துக்குடி போலீசார் இது போன்ற மீம்ஸ் போட்டு எச்சரிக்கை செய்த நிலையில் இப்போது திண்டுக்கல் போலீசாரும் அந்த யுக்தியை கையாண்டுள்ளனர். அதில் பொதுமக்கள் தங்கள் பர்சில் இருந்து பணம் எடுப்பது போலவும், திருடர்கள் கவனிப்பது போலவும் நகைச்சுவை நடிகர் வடிவேலு படத்தை போட்டு மீம்ஸ் தயாரித்துள்ளனர். இது சமூக வலைதளவாசிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.