கத்திரி வெயிலுக்கு டாட்டா பை-பை சொல்லுங்க மக்களே!?

 

கத்திரி வெயிலுக்கு டாட்டா பை-பை  சொல்லுங்க மக்களே!?

அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடியும் நிலையில், இன்றும் நாளையும் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சென்னை: அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடியும் நிலையில், இன்றும் நாளையும் அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

கோடைக்காலம் வந்துவிட்டாலே வெயில் மண்டையைப் பிளக்கும். வெளியில் மக்கள் வரவே அச்சப்படும் அளவிற்குக் கோடை வெயிலின் தாக்கம் ஒவ்வொருவரும் ஆண்டும் இருந்து வருகிறது. அப்படி தமிழகக் கடற்கரைப் பகுதிக்கு அருகில் வந்து திசை மாறிச் சென்ற ஃபனி புயல், ஈரப்பதம் மொத்தத்தையும் ஈர்த்துச் சென்றதால் வழக்கத்தை வெயிலின் கொடுமை இருக்கும் என்று அனல் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 

summer

அதன்படி இந்த ஆண்டும் மக்களை வட்டி வதைக்கத் தவறாமல் வந்தது அக்னி நட்சத்திரம்.  கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய கத்திரி வெயிலால் பல இடங்களில் வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக நேற்று 17 இடங்களில்  வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியதாகக் கூறப்படுகிறது.  வேலூர், திருச்சி, மதுரை, கரூரில் உள்ள பரமத்தி ஆகிய இடங்களில் வெப்பத்தின் தாக்கம் உச்சக்கட்டமாக இருந்தது. 

summer

இந்நிலையில் இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், வெப்ப சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும், இன்றுடன் அக்னி வெயில் முடிவதால் தமிழகத்தில் வழக்கத்தை விடவும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும் இன்றும் நாளையும் அனல் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.