கத்திரிக்காய் சட்னி

 

கத்திரிக்காய் சட்னி

சைவ விரும்பிகள்  பலருக்கு கத்தரிக்காய் என்றால் கொள்ளை பிரியம் என்றே சொல்லலாம். சிலர் கத்தரிக்காயை அசைவம் சாப்பிடுவது போல ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள்.

சைவ விரும்பிகள்  பலருக்கு கத்தரிக்காய் என்றால் கொள்ளை பிரியம் என்றே சொல்லலாம். சிலர் கத்தரிக்காயை அசைவம் சாப்பிடுவது போல ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு கத்தரிக்காய்க்கு என்று ஒரு தனி மவுசு எப்போதும் உள்ளது. கத்தரிக்காய் பிரியர்கள் கவனத்திற்கு.. நீங்கள் பொதுவாக கத்தரிக்காய் குழம்பு, பச்சடி, பொரியல் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால்  கத்தரிக்காய் சட்னி பல பேருக்கு தெரியாது.  அப்படி நாக்கில் எச்சில் ஊறவைக்கும் கத்தரிக்காய் சட்னி சமைப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க…!

brinjal chutney

தேவயாவான பொருட்கள்: 

பெரிய கத்திரிக்காய் – 1/4 கிலோ 

பெரிய வெங்காயம் – 2

காய்ந்த மிளகாய்- 8

புளி – நெல்லிக்காய் அளவு 

உப்பு – தேவியான அளவு 

கடுகு – 1 ஸ்பூன் 

பெருங்காயம் – 1 ஸ்பூன் 

எண்ணெய் – 1 குழிக்கரண்டி 

கடலைப் பருப்பு- 2 ஸ்பூன் 

செய்முறை:

கதிரைக்காயை வேகவைத்து, மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.  எண்ணெய் காயவைத்து, தாளித்த சாமான்களைப் போட்டு, உப்பு, புளி, மிளகாய் சிவக்க வறுத்து காரகரப்பாய் எடுக்கவும். 

brinjal chutney

அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்காயவைத்து, வெங்காயத்தை வதக்கி, மசித்த கத்திரிக்காய், அரைத்த கலவையைப் போட்டு, கொதி வந்தபின் இறக்கவும்.