“கத்தரிக்காயும் வாங்கணும் கம்ப்யூட்டரையும் பாக்கணும்” – வீட்லயிருந்தே வேலை செய்யும் நிலைமை -2021ம் ஆண்டு முழுவதும் நீடிக்கும் என கணிப்பு.

“கத்தரிக்காயும் வாங்கணும் கம்ப்யூட்டரையும் பாக்கணும்” – வீட்லயிருந்தே வேலை செய்யும் நிலைமை -2021ம் ஆண்டு முழுவதும் நீடிக்கும் என கணிப்பு.

கொரானாவால் ஏற்பட்ட பாதிப்பு , முன்பு அலுவலகம் சென்று வேலை பார்த்த தகவல் தொழில்நுட்ப பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்க வைத்துள்ளது . .அவர்கள் இப்போது சொந்த ஊரில் காற்றோட்டமாக ,வயல்களிலும் ,தோப்புக்களிலும் கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு மன அழுத்தமின்றி வேலை பார்ப்பதாக பலர் கூறுகிறார்கள் .

“கத்தரிக்காயும் வாங்கணும் கம்ப்யூட்டரையும் பாக்கணும்” – வீட்லயிருந்தே வேலை செய்யும் நிலைமை -2021ம் ஆண்டு முழுவதும் நீடிக்கும் என கணிப்பு.
இதனால் வீடியோ கான்பரன்ஸ்கள் காடு மேடுகளில் நடக்கிறது ,பல ஆண்கள் கடைக்கு போய் காய்கறி வாங்கிக்கொண்டே கம்ப்யூட்டரில் வேலை பார்க்கிறார்கள் ,வீட்டிலேயே வேலை பார்ப்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் அவஸ்தையில்ல்லாமல் ,சுத்தமான காற்றை சுவாசித்துக்கொண்டு ,சுத்தமான குடிநீரைக்குடித்துக்கொண்டு ,சுத்தமான உணவு வகைகளை வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு கொண்டு பலர் வேலை செய்கிறார்கள் .
இந்த நிலைமை மாறுவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகுமென்று பல நிபுணர்கள் கணித்துள்ளார்கள் .ஏனென்றால் கொரானாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்து ,அது நடை முறைக்கு வந்து ,பிறகு நோயின் தாக்கம் குறைய ஒரு வருடம் ஆகிவிடுமென்றும் ,இதனால் நிறுவனங்களும் ஆதாயம் அடைந்துள்ளதாகவும் கூறுகிறது ஒரு ஆய்வு .காரணம் என்னவென்றால் ,பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால் ஆபீஸ் வாடகை ,நிர்வாக செலவு போன்றவை மிச்சமாகுவதாக ஒரு கம்பெனி நிர்வாகி கூறினார்.

“கத்தரிக்காயும் வாங்கணும் கம்ப்யூட்டரையும் பாக்கணும்” – வீட்லயிருந்தே வேலை செய்யும் நிலைமை -2021ம் ஆண்டு முழுவதும் நீடிக்கும் என கணிப்பு.