கதை மட்டுமா பாட்டையும் திருடுறது ஃபேஷனாகிவிட்டது

கதை மட்டுமா பாட்டையும் திருடுறது ஃபேஷனாகிவிட்டது

தமிழ் சினிமாவில் கற்பனை திருட்டு என்ற சம்பவம் சமீபகாலமாக அதிகளவில் நடக்கிறது. சினிமாவில் புதிய அடையாளத்தை உருவாக்க அல்லும் பகலும் பாடுபடும், வளர்ந்து வரும் கலைஞர்களின் கற்பனைகளை பல வளர்ந்த கலைஞர்கள் திருடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

சமீபத்தில் உச்ச நடிகர், பிரம்மாண்ட தயாரிப்பு, பிரபல இயக்கம் என பெரும் செல்வாக்கு கொண்ட கூட்டணியே வளர்ந்து வரும் கலைஞரின் கற்பனையை திருடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. செல்வாக்கும், செல்வமும் இல்லாத வளர்ந்து வரும் கலைஞரோ, நீதிமன்றம் வரை சென்று போராடி தனது கற்பனைக்கு அங்கீகாரம் சேர்த்தார்.

கதை திருட்டு தான் இருக்கிறது என்று பார்த்தால், கற்பனை பொங்கும் காதல் பாடல்களின் வரிகளும் திருடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருது வாங்கிய மீடூ பிரபலம் பாடிய வாகை பாடல் வளர்ந்து வரும் பாடலாசிரியரிடம் இருந்து மீசை கவிஞர் திருடியதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

gossip

பல காதல் பாடல்களின் வரிகள் மூலம் ரசிகர்களின் மனதில் காதல் துளையிட்ட மீசை கவிஞர் வாங்கிய விருதுகள், பாராட்டும், புகழும் எண்ணற்றவை. அத்தகைய பேரும், புகழும் இருந்த போதிலும், தமிழ் சினிமாவில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள போராடும் வளர்ந்து வரும் கலைஞரின் கற்பனையில் உதித்த மாசற்ற வரிகளை திருடி மீசை கவிஞர் புகழை சம்பாதித்ததை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

என்றைக்கோ தனது கற்பனை வரிகள் களவாடப்பட்டிருந்தாலும், தனது அயராத உழைப்பினால், இன்று தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும் பெற்றுள்ள அந்த வளர்ந்து வரும் பாடாலசிரியருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களும் பெருகி வருகின்றது.