கதை திருட்டில் சிக்கி கொண்ட ‘காப்பான்’: தடை கேட்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு!

 

கதை திருட்டில் சிக்கி கொண்ட ‘காப்பான்’: தடை கேட்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘காப்பான்’ படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா- சாயிஷா இணைந்து நடித்துள்ள படம் காப்பான். லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
 ஆகஸ்ட் 30 வெளியாக இருந்த நிலையில் தற்போது செப்டம்பர் 20ம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று சென்னை சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜான் சார்லஸ் உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், ’10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் கதைகளை எழுதியுள்ளேன். கடந்த 2014-16ஆம் ஆண்டுகளில் ‘சரவெடி’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி அதில், பத்திரிகை நிருபரான கதாநாயகன், இந்திய பிரதமரிடம் பேட்டி காணும்போது, விவசாயம், நதி நீர் இணைப்பு மற்றும் நதி நீர் பொது பங்கீடு ஆகியவற்றின் நன்மை குறித்து எடுத்துரைப்பார். இந்தக் கதையை பிரபல இயக்குநர் கே.வி.ஆனந்த்திடம் விரிவாகக் கூறினேன். அவர் கதையை நன்றாக உள்வாங்கிக் கொண்டார். எதிர்காலத்தில் இந்தக் கதையைப் படமாக்கும்போது எனக்கு வாய்ப்பு தருவதாகக் கூறினார். நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

kappan

என்னுடைய ‘சரவெடி’ கதையை ‘காப்பான்’ என்ற பெயரில் கே.வி.ஆனந்த் படமாக்கியுள்ளார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. அதில், நதிநீர் இணைப்பு மற்றும் பங்கீட்டு குறித்தும், விவசாயம் குறித்தும் பிரதமருக்கு பத்திரிகையாளராக நடித்துள்ள ஹீரோ விளக்கம் அளிக்கிறார். என்னுடைய கதையை, தலைப்பை மாற்றி எடுத்துள்ள இந்த ‘காப்பான்’ படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளனர். எனவே, ‘காப்பான்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காப்பான் படம் ஆகஸ்டு மாதம் வெளியாகவில்லை. செப்டம்பர் 20-ந்தேதி தான் வெளியாகவுள்ளது. அதனால், இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டாம்’ என்று வாதிட்டனர். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, விசாரணையை வரும் செப்டம்பர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.