கதறிய சிவன்; கட்டியணைத்து ஆறுதல் சொன்ன மோடி: வைரல் வீடியோ!

 

கதறிய சிவன்; கட்டியணைத்து ஆறுதல் சொன்ன மோடி: வைரல் வீடியோ!

எதிர்பாராத விதமாக லேண்டரில்  இருந்து சிக்னல்  வரவில்லை. இதனால் அதன் தகவல் தொடர்பு  துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது

பெங்களூரு: பிரதமர் மோடியிடம் கண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர் சிவனை மோடி கட்டியணைத்து ஆறுதல் கூறினார். 

isro

இஸ்ரோ கடந்த ஜூலை 22ஆம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காகச்  சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலமானது  ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி நிலவின் பாதைக்குத் திருப்பி விடப்பட்டது. இதைத் தொடர்ந்து நிலவின் சுற்று வட்டப் பாதையில் சந்திரயான்-2-வின் வேகம் படிப்படியாகக்  குறைக்கப்பட்டு,  கடந்த 2ஆம் தேதி ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரம் பிரிக்கப்பட்டது. 

modi

இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி தொடங்கப்பட்டது. இதை பார்வையிட பிரதமர் மோடி, மாணவர்கள் பலர் வருகை புரிந்திருந்தனர். ஆனால்  எதிர்பாராத விதமாக லேண்டரில்  இருந்து சிக்னல்  வரவில்லை. இதனால் அதன் தகவல் தொடர்பு  துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. இதனால் விஞ்ஞானிகள் வருத்தமடைந்தனர். அவர்களுக்குப்  பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். 

 

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் இன்று காலை  பேசிய பிரதமர் மோடி, பின்பு அங்கிருந்து கிளம்பினார். அப்போது இஸ்ரோ தலைவர் சிவனை  கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். அப்போது சிவன் கதறி அழுதார். இதைக்கண்ட மற்ற விஞ்ஞானிகளும் கண் கலங்கினர். இந்த  வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.