‘கண்ணை மறைத்த காதல்’ : தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்!

 

‘கண்ணை மறைத்த காதல்’ :  தந்தையை கத்தியால் குத்தி பெட்ரோல் ஊற்றி எரித்த 15 வயது மகள்!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொன்று எரித்த மகள் மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர். 

பெங்களூரு : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொன்று எரித்த மகள் மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர். 

பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் ஜெயின். இவருக்கு பூஜாதேவி என்ற மனைவியும்,  15 வயதில் மகளும், 12 வயதில் மகனும் உள்ளனர். மகள் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஜெயக்குமார் துணி வியாபாரம் செய்து வருகிறார். பூஜாதேவி, மகனுடன் கடந்த 17- ஆம் தேதி திருமண விழாவுக்காக சென்றுள்ளார். வீட்டில் ஜெயகுமாரும் அவரது மகள் மட்டும் இருந்துள்ளனர். 

crime

இந்நிலையில் மறுநாள் காலை அதாவது 18ஆம் தேதி காலையில், ஜெயக்குமார் வீட்டு பாத்ரூமில் இருந்து புகை வெளிவந்ததால், அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த அவர்கள் தீயை அணைத்த பின் பார்த்ததில் ஜெயக்குமார் உடல் கருகி சடலமாகக் கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். 

வீட்டில் சோதனை செய்த போது, பெட்ரூமில் ரத்தக் கறை இருந்தது தெரிந்தது. இதனால் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அவரது மகள் காலில் தீக்காயம் இருந்தது. இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. 

இதுகுறித்து கூறும் போலீசார் தரப்போ , ஜெயக்குமார் ஜெயின் மகள் வீட்டின் அருகில் உள்ள கல்லூரி மாணவர்  பிரவீன் (18) என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இது அவரது பெற்றோருக்கு தெரியவர மகளை கண்டித்ததுடன் அவரின் செல்போனையும் பிடுங்கி வைத்தனர், இதனால் அப்பா, அம்மா மீது அந்த பெண் கோபத்திலிருந்து வந்துள்ளார். இதையடுத்து  அப்பாவை, காதலனுடன் சேர்ந்து கொல்ல முடிவு செய்த அப்பெண் பூஜாதேவி புதுச்சேரி சென்றதும் அப்பாவுக்கு பாலில் தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்தார். பின்னர் பிரவீனை வீட்டுக்கு அழைத்து இருவரும் கத்தியால் குத்தி ஜெயக்குமாரைக் கொலை செய்துள்ளனர். 

crime

இதையடுத்து அவரது உடலை பாத்ரூமுக்கு கொண்டு சென்று  பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். அப்போது அவர்கள் 2 பேரின் கால்களிலும் தீப்பற்றியது. இருப்பினும் அதை கவனத்தில் கொள்ளாமல், எலெக்ட்ரிக் ஷாக் காரணமாக வீட்டில் தீ பிடித்தது என்று நாடகமாடத் திட்டமிட்டது தெரியவந்தது. 

கொலை குற்றத்திற்காக பிரவீனையும் ஜெயக்குமாரின் மகளையும் போலீசார் கைதுசெய்தனர். அதில் அவரது மகளுக்கு  15 வயதே ஆவதால் அவர்  காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். மேலும்  பிரவீனை போலீசார் சிறையில் அடைத்தனர்.