கண்ணை கவரும் மாஸ்டர் ஆல்பம்! 45 வயதிலும் இளமை ததும்பும் விஜய்!! 

 

கண்ணை கவரும் மாஸ்டர் ஆல்பம்! 45 வயதிலும் இளமை ததும்பும் விஜய்!! 

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

master

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். த்ரில்லர் பாணியில்  உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ். விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர்.

master

இப்படத்தின்படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா சென்னையில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் நெய்வேலியில் நடைபெற்றது. அங்கு விஜய் சேதுபதி மற்றும் விஜய்க்கான காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அண்மையில் மாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகி ஹிட் அடித்தது. 

master

இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் புதிய புகைப்படங்களை, படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் அவர் மாணவர்களோடு நடந்துசெல்வது, அங்குள்ள ஊழியர்களுடன் உரையாடுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.