‘கண்ணுல பயத்தை பாத்தேன்..! வைரலாகும் கேரள பெண்ணின் வீடியோ!

‘கண்ணுல பயத்தை பாத்தேன்..! வைரலாகும் கேரள பெண்ணின் வீடியோ!

சாலைகளில் முறைக்கேடாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த சுவடு கூட இன்னும் காயவில்லை… ஆனாலும், குண்டும் குழியுமான சாலைகள், சாலை விதிமுறைகளை காற்றில் பறக்க விடும் வாகனங்கள் என்று எதையோ அடுத்த நிமிடத்தில் பிடித்து விடுகிற வேகத்தில் விரைந்து செல்கிற வாகன ஓட்டிகள், சாலைகளில் சாகசம் புரியும் யூத்துக்கள் என்று நாடு முழுக்கவே அடுத்தவர்களின் உயிரைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் செல்கிற மனோபாவம் இருந்து வருகிறது.

women

கேரளாவில் கண்ணைத்து, உதடு குவித்து காதல் சொன்ன பெண்ணை ஓவர் நைட்டில் பாப்புலராக்கினோம். ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு மொழி புரியாமலேயே தலையசைத்து நாமும் வந்தனம் சொன்னோம். ஆனால் ஒரே நாளில் ஒட்டு மொத்த கேரளாவையுமே திரும்பி பார்க்க வைத்திருக்கும் ஒரு பெண்ணை எந்த மீடியாவுமே கண்டு கொள்ளவில்லை.
ஒரு வழி பாதையில், தவறாக பாதை மாறி வேகமாக வருகிறது ஒரு அரசு பேருந்து. எதிர் திசையில் ஒரு வழி பாதை என்பதால் வேகமாக வாகனங்கள் விரைந்து சென்று கொண்டிருக்கின்றன. முன்னால் ஒரு பள்ளி வாகனம். கொஞ்சமும் யோசிக்காமல், எதிர்திசையில் வந்து கொண்டிருக்கிற பேருந்திற்கு வழி கொடுக்காமல், பேருந்தின் எதிரிலேயே கொண்டு போய் வண்டியை நிறுத்தியிருக்கிறார் கேரளாவை சேர்ந்த அந்த பெண்மணி.  பேருந்திற்கு வழிவிடாமல் பெண் ஒருவர் நின்ற வீடியோ வெளியாகி கேரளா முழுவதும்  வைரலாகி கொண்டிருக்கிறது. அந்த பெண்ணின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து கொண்டிருக்கின்றனர். சாவகாசமாக பேருந்தை வலது புறம் திருப்பி செல்லும் வரையில் பேருந்து ஓட்டுனருக்கு சவால் விடுவதைப் போல காத்திருக்கிறார்.

women

இது குறித்து அந்த பெண் கூறும் போது, நான் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, எனக்கு முன்னால் ஒரு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து திடீரென இடது புறம் சென்று நின்றது. அந்த நேரத்தில் பள்ளி பேருந்து திரும்பிய போது, நான் சென்ற சாலையில் எதிரே அரசு பேருந்து ஒன்று மற்றொரு வாகனத்தை முந்தி கொண்டு வருவதைப் பார்த்தேன். அப்போது அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நான், என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் அப்படியே நின்றேன். அந்த பேருந்து வந்த வேகத்திற்கு என்ன வேண்டுமாலும் நடந்திருக்கலாம். ஆனால் அப்படி வருவது தவறு. இப்படியே விட்டால், வேகத்தைக் குறைக்காமல் ஏதாவது விபத்தை ஏற்படுத்துவார் என்று எதிரில் நிறுத்தினேன்.  நான் 7 வருடமாக அந்த சாலையில் பயணம் செய்கிறேன். ஆனால் இது போன்று நடப்பது இதுதான் முதல் முறை” என தெரிவித்துள்ளார்.