கண்ணீர் வழியாக கொரோனா பரவாது! – ஆய்வாளர்கள் உறுதி

கண்ணீர் வழியாக கொரோனா பரவாது! – ஆய்வாளர்கள் உறுதி

கொரோனா பாதிக்கப்பட்டவரின் எச்சில், தும்மல், இருமல் மூலம் வெளிப்படும் நீர்த்தவளை வழியாக கொரோனா பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவரின் கண்ணீர் மூலமாகக் கூட கொரோனா பரவலாம் என்று சமூக ஊடகங்களில் பலரும் வதந்தி கிளப்பி வந்தனர். அதற்கு ஆய்வாளர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவரின் கண்ணீர் வழியாக கொரோனா வைரஸ் பரவாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவரின் எச்சில், தும்மல், இருமல் மூலம் வெளிப்படும் நீர்த்தவளை வழியாக கொரோனா பரவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவரின் கண்ணீர் மூலமாகக் கூட கொரோனா பரவலாம் என்று சமூக ஊடகங்களில் பலரும் வதந்தி கிளப்பி வந்தனர். அதற்கு ஆய்வாளர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

corona-researchers

சிங்கப்பூர் தேசிய மருத்துவப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் கொரோனா பாதிக்கப்பட்ட 17 பேரின் கண்ணீர் மாதிரியை சேமித்து ஆய்வு செய்தனர். அறிகுறிகள் தென்பட்ட நாளிலிருந்து 20 நாட்கள் வரை அவர்களுடைய கண்ணீர் மாதிரி பெறப்பட்டது. இவற்றை அவர்கள் சோதனை நடத்தியதில் எந்த ஒரு நிலையிலும் கண்ணீரில் வைரஸ் இருப்பது கண்டறியப்படவில்லை. 

corona-symptoms-78

அதே நேரம் அவர்களது மூக்கு, தொண்டை திசுக்களை சோதனை செய்தும் வந்தனர். அதில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனால், இவர்கள் தங்கள் வாயில் கை வைத்துவிட்டு, சளியை பொது இடங்களில் துப்பினால் அதன் மூலமாக வைரஸ் கிருமி பரவும் என்று எச்சரக்கைவிடுத்துள்ளனர். அதே நேரத்தில் அவர்களின் கண்ணீர் மூலமாக வைரஸ் பரவாது என்றும் உறுதி செய்துள்ளனர்.