கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை !

 

கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை !

அதிக வெங்காய விளைச்சல் அளிக்கும் பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ஆந்திர, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட அதிக வெங்காய விளைச்சல் அளிக்கும் பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வெங்காய விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

Onion

தமிழகத்தைப் பொறுத்த வரை இன்று ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 70 முதல் 90 வரை விற்கப்பட்டு வருகிறது. அதிரடியாக வெங்காய விலை உயர்ந்து வருவது பொது மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

Onion

அதன் படி, வெளிநாடுகளில் இருந்து 1000 டன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய  நுகர்வோர் துறை அமைச்சரக அதிகாரிகள், தனியார் வியாபாரிகள் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை வர இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின் படி, இந்த மாத இறுதிக்குள் பெரிய வெங்காயம் இந்தியாவிற்கு வந்து சேரும் என்று தெரிவித்துள்ளனர். இதனால், வெங்காய விலை உயர்வு விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.