கண்ணாடிய திருப்புனா எங்க ஆட்டோ ஓடும்.. நிரூபித்து காட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் !!

 

கண்ணாடிய திருப்புனா எங்க ஆட்டோ ஓடும்.. நிரூபித்து காட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் !!

பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பெற்ற அசத்தல் வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது.

புதுடெல்லி : பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பெற்ற அசத்தல் வெற்றியின் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.

டெல்லி பிரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

dc

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு ஷிகர் தவான் 50 ரன்களும் , ஸ்ரேயஸ் ஐயர் 52 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 187 ரன்கள் குவித்தது. 

rcb

இதனையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு பார்த்தீவ் பட்டேல் நல்ல துவக்கம் கொடுத்தாலும் பின்வரிசையில் வந்த வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பெங்களூர் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது, அதே வேளையில் டெல்லி அணி ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 

dc

பல ஆண்டுகளாக தொடர்ந்து சொதப்பி வந்த டெல்லி அணி, இந்த முறை டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரை டெல்லி கேப்பிடல்ஸ் என்று மாற்றிய போது “கண்ணாடிய திருப்பினா எப்படி ஆட்டோ ஓடும்” என்று கிண்டலடித்த மற்ற அணி ரசிகர்களுக்கு டெல்லி ரசிகர்கள் கண்ணாடிய திருப்பினா எங்க ஆட்டோ மட்டும் ஓடும் என்ற வகையில் வெறித்தனமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.