கண்ட நேரத்துல சாப்பிடறீங்களா? -காலையில் தண்ணீர் குடிங்க.

 

கண்ட நேரத்துல சாப்பிடறீங்களா? -காலையில் தண்ணீர் குடிங்க.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நம் உடலிலுள்ள பல்வேறு உபத்திரவங்கள் சரிசெய்யப்படுகிறது .அதனால் ஏற்படும் நன்மைகளை அறிய தொடர்ந்து படியுங்கள்.


அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது நோய்களை எதிர்த்து போராட உதவும். எந்த நோயும் அவ்வளவு எளிதில் நம்மை அண்டாது.நீங்கள் குடிக்கும் தண்ணீரானது உடலுக்குள் உணவுப்பாதை வழியாக‌ சென்று மூலை முடுக்குகளில் தேங்கியிருக்கும் உடலில் தங்கியுள்ள நச்சுக்கள், தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து ,அதை சிறுநீர் மூலமாக வெளியேற்றி உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.அதோடு பசியையும் தூண்டிவிடும்.
மேலும் இரத்த சிவப்பணுக்கள் வளர்ச்சி அதிகரித்து இரத்தமானது ஆக்ஸிஜன் அதிகளவில் உள்ளிழுக்கும். இதனால் உடலானது சோர்வடையாமல் எப்போதும் கூடுதல் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
குறிப்பாக நீர்ச்சத்து பற்றாக்குறையுடன் இருப்பவர்கள் தினந்தோறும் அதிகாலை வேளையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலி உட்பட சில நோய்களின் வீரியத்தையும் குறைக்கும். அதோடு வேலைப்பளுவால் கண்ட நேரத்தில் ,கண்ட ஹோட்டலில் சாப்பிட்டு வயிறை கெடுத்து வைத்திருப்பவர்கள் இப்படி வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் அவர்களுக்கு அல்சர் போன்ற வயிற்று பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

கண்ட நேரத்துல சாப்பிடறீங்களா? -காலையில் தண்ணீர் குடிங்க.