கண்டிப்பாக இந்த முறை என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகிறதாம் மக்களே… 

 

கண்டிப்பாக இந்த முறை என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகிறதாம் மக்களே… 

நடிகர் தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

கண்டிப்பாக இந்த முறை என்னை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகிறதாம் மக்களே… 

நடிகர் தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.  ஒன்றாக என்டெர்டையின்ட்மென்ட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் மூன்று ஆண்டுகளாக படம் இன்னும் வெளியாகவில்லை. 

ஏற்கனவே, இப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால், பல்வேறு பிரச்சினைகள் காரணமாகப் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து கொண்டே இருக்கிறது. இதனால் கடுப்பான ரசிகர்கள் எப்போ தான் இந்த படத்தை ரிலீஸ் செய்விர்கள்? என்று குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். 

இந்த நிலையில் இந்த படம் அப்போ வருகிறது? இப்போ வருகிறது என்று தகவல் மட்டுமே வெளியாகிக் கொண்டு இருந்தது. ஆனால் இதுவரை அப்படி எந்த ஒரு அறிவிப்பையோ? அல்லது தகவலையோ படக்குழு வெளியிடவே இல்லை. தற்போது மீண்டும் இந்த படம் வரும் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவும் எப்பவும் போல் ஒரு வதந்தியாகவே இருக்கும் என்று ரசிகர்கள் எண்ணினர். ஆனால் உன்மையில் படம் சொன்ன தேதியில் வெளியாகிவிடும் என்று இந்த படத்தில் நடித்த சசிகுமார் சமீபத்தில் பிரபல ஊடக பேட்டியில் கலந்து கொண்டு கூறியுள்ளார். . இவரின் பேச்சைக் கேட்ட ரசிகர்கள் இந்த முறையாவது நம்பலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.