கண்டித்தால்தான் குடிமகன்! – டெல்லி ரத்தன் லாலுக்காக உருகிய எச்.ராஜா

கண்டித்தால்தான் குடிமகன்! – டெல்லி ரத்தன் லாலுக்காக உருகிய எச்.ராஜா

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்துவந்த சூழலில், ஆதரவு தெரிவித்து பா.ஜ.க போராட்டத்தில் குதித்தது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தலைமைக் காவலர் ரத்தன் லால் உள்ளிட்ட மூன்று பேர் போலீசார் என்று கூறப்படுகிறது. 

டெல்லியில் நடந்து வரும் வன்முறை சம்பவத்தால் உயிரிழந்த காவலர் ரத்தன் லாலின் படத்தை வெளியிட்டு, இந்த மரணத்தை கண்டிக்காத எவரும் நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியில்லை என்று எச்.ராஜா ட்வீட் செய்துள்ளார்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்துவந்த சூழலில், ஆதரவு தெரிவித்து பா.ஜ.க போராட்டத்தில் குதித்தது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தலைமைக் காவலர் ரத்தன் லால் உள்ளிட்ட மூன்று பேர் போலீசார் என்று கூறப்படுகிறது. 

ratanlal-final-tribute

ரத்தன் லால் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக போராடுபவர்களால் கொல்லப்பட்டாரா, எதிர்ப்பாளர்களால் கொல்லப்பட்டாரா என்று தெரியவில்லை. அதற்குள்ளாக பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா விசாரணையை முடித்து தீர்ப்பே கூறிவிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “முஸ்லீம் வன்முறையாளர்களால் இன்று தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பம் அனாதையாக்கப் பட்டுள்ளது. இதை கண்டிக்காத எவரும் இந்நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள்” என்று கூறியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ந்து வரும் கலவரத்தில் ரத்தன் லால் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்திருப்பது கண்டிக்கத்தக்கதே. ஆனால், ஒரே ஒருவருக்காக மட்டும், எச்.ராஜா உருகியிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.