கண்டித்தாலும் கடமை தவறமாட்டேன் ! ஐஏஎஸ் ரேணுராஜ் சூளுரை !

 

கண்டித்தாலும் கடமை தவறமாட்டேன் ! ஐஏஎஸ் ரேணுராஜ் சூளுரை !

எத்தனை இடங்களுக்கு டிரான்ஸ்ஃபர் செய்தாலும் கடமையில் இருந்து தவற மாட்டேன் என ஐஏஎஸ் அதிகாரி ரேணுராஜ் தெரிவித்துள்ளார்.

எத்தனை இடங்களுக்கு டிரான்ஸ்ஃபர் செய்தாலும் கடமையில் இருந்து தவற மாட்டேன் என ஐஏஎஸ் அதிகாரி ரேணுராஜ் தெரிவித்துள்ளார்.

2014ம் ஆண்டு அகில இந்திய அளவிலான யுபிஎஸ்சி தேர்வில் இரண்டாவது இடம் பிடித்த ரேணுராஜ் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிரடி காட்டி வந்தவர். ஒரு நாளை கூட வீணாக்காமல், தன்னுடைய பணியை சரியாக செய்வதாக பெருமைக்கொள்கிறார் ரேணுராஜ்.  

iasrenuraj

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ரேணு ராஜ் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் மலைப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் மீது எடுத்த வந்த நடவடிக்கையால் தற்போது அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 10 மாதங்களுக்கு முன்னர் தேவிகுளத்தின் உதவி ஆட்சியராக பதவி ஏற்ற ரேணு ராஜ் பதவியேற்ற நாள் முதலே விதிகளை மீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்துவந்தார். அரசு கட்டிடம் மட்டுமின்றி, முறைகேடாக நிலம் வாங்கியதாகக் கூறப்படும், அரசியல் பிரமுகர் ஒருவரின் நிலப் பட்டாவை ரத்து செய்தும் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதனால் எம்எல்ஏ ஒருவரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் ரேணுராஜ். இந்த வீடியோ வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனினும் ஆற்றங் கரையோரத்தில் அரசு கட்டிடம் கட்டப்பட்டதைக் கண்டித்த கேரள நீதிமன்றம், உதவி ஆட்சியர் ரேணு ராஜ் எடுத்த நடவடிக்கை சரியே என்று தீர்ப்பு அளித்தது. இதனால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேவிகுளம் மற்றும் மூணாறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உதவி ஆட்சியர்கள் 16 பேர், கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.