கணேசா மீண்டும் சந்திப்போம்:  ஓவியாவை வைத்து ஏன் பார்வையாளர்களை சீட்டிங் செய்யுறீங்க? பொங்கி எழுந்த ரசிகர்!

 

கணேசா மீண்டும் சந்திப்போம்:  ஓவியாவை வைத்து ஏன் பார்வையாளர்களை சீட்டிங் செய்யுறீங்க? பொங்கி எழுந்த ரசிகர்!

நடிகை ஓவியா நடித்துள்ள கணேசா மீண்டும் சந்திப்போம் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் படக்குழு மீது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை: நடிகை ஓவியா நடித்துள்ள கணேசா மீண்டும் சந்திப்போம் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் படக்குழு மீது கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

களவாணி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் அடைந்தார். அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கிய இந்த படத்தில் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

ganesha meendum santhippom

அதையடுத்து தற்போது ஓவியா நடிப்பில் கணேசா மீண்டும் சந்திப்போம் என்ற திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இப்படத்தில் பரிதவி ராஜன்,  தேவிக்கா நம்பியார், சிங்கம் புலி என பலர் நடித்துள்ளனர்.

ganesha meendum santhippom

இந்நிலையில் இப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் படக்குழு விமர்சனம் செய்துள்ளார்  ‘படத்தில் ஓவியா இரண்டு, மூன்று காட்சிகள் மட்டுமே வருகிறார். ஏன் இப்படி சீட்டிங் செய்து பார்வையாளர்களைப் படம் பார்க்க அழைக்குறிங்க? என்றும் அதற்கு ஏன் ஓவியாவுக்கு இப்படி முக்கியத்துவம் கொடுத்து விளம்பரம்’ என்று கூறியுள்ளார். 

ganesha meendum santhippom

இந்த நிலையில் சமீபகாலமாகச் சிறிய பட்ஜெட் படங்களின் பிரபலமான நடிகர், நடிகைகளை வைத்து விளம்பரம் செய்து வருகின்றனர். அதற்கு உதாரணமாகச் சமீபத்தில் வெளியான சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி வைத்து விளம்பரம் செய்து இருந்தனர். இது தொடர்ச்சியாகப் பல படங்களில் நடைபெற்று வருவதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைக்கின்றனர். . 

இதையும் படிங்க: களைகட்டும் குறளரசன் திருமணம்: மகனுடன் சென்று சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பு விடுத்த டி.ஆர்