கணினி, ஸ்மார்ட்போன் திரைகளின் நீல ஒளி சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது?

 

கணினி, ஸ்மார்ட்போன் திரைகளின் நீல ஒளி சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது?

லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களின் திரை வெளியிடும் நீல ஒளி கண்பார்வையை பலவீனப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சருமத்தையும் பெரிதும் பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஊரடங்கு நேரத்தில் ஸ்மார்ட்போன் மூலம் ஸ்க்ரோலிங் செய்வதில் நீங்கள் அதிக நேரம் செலவிடுகிறீர்களா? அல்லது அலுவலக வேலை காரணமாக லேப்டாப் திரை முன் நீண்ட நேரம் பணி புரிகிறீர்களா? உங்களுக்காக சில செய்திகள் இங்கே!

லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களின் திரை வெளியிடும் நீல ஒளி கண்பார்வையை பலவீனப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சருமத்தையும் பெரிதும் பாதிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ttn

சூரியனால் வெளிப்படும் தீங்கு விளைவிக்க புற ஊதாக் கதிர்களை பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அதனால் சூரியனில் இருந்து புற ஊதாக் கதிர்களால் நம் சருமத்திற்கு எந்தவிதமான சேதமும் ஏற்படாமல் இருக்க வெவ்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறோம். ஆனால் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளியும் சருமத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பது நிறைய பேருக்கு தெரியாது.

ttn

மின்னணு சாதனங்களின் திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளி ஒரு குறுகிய அலைநீள ஒளியாகும். இது அதிக சக்தியை வெளியிடுகிறது. சூரியனில் இருந்து வெளியாகும் குறிப்பிட்ட அளவு நீல ஒளியானது நமக்கு நன்மை கொடுக்கும். ஆனால், ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் இருந்து வரும் நீல ஒளி மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். அதனால் இதில் நேர்மறையான பயன்கள் எதுவும் இல்லை.

ttn

இத்தகைய நீல ஒளிகள் நம்முடைய தோள்களில் சுருக்கத்தை ஏற்படுத்தி வயதான தோற்றத்தை கொடுக்கும். கருமையான சருமத்தை கொண்டவர்களின் சருமத்தில் அதிக மெலனின் இருப்பதால், இத்தகைய நீல ஒளிகளால் தோல் சிவந்து போக வாய்ப்புள்ளது.

ttn

மின்னணு சாதன திரைகளில் இருந்து வெளிப்படும் நீல ஒளியால் ஏற்படும் எந்தவொரு சேதத்திலிருந்தும் நம்முடைய சருமத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். ஆனால், தொழில்நுட்பம் சார்ந்த இன்றைய நவீன உலகில் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்கவும் முடியாது. நமது சருமத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி என்னவெனில், வீட்டிற்குள் இருக்கும்போது கூட நாம் சன்ஸ்கிரீன் அணிவது ஆகும். சன்ஸ்கிரீன்களில் உள்ள SPF உள்ளடக்கம் எந்தவொரு தீங்கு விளைவிக்கும் ஒளியிலிருந்தும் நமது சருமத்தைப் பாதுகாக்கிறது. இந்த வழிமுறை கைகொடுக்கவில்லை என்றால், நல்ல தோல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே எப்போதும் நல்லது!