கணவர் இறந்த இன்ஸ்யூரன்ஸ் காசுக்காக மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்

 

கணவர் இறந்த இன்ஸ்யூரன்ஸ் காசுக்காக மாமியாரை தீர்த்துக்கட்டிய மருமகள்

விபத்தில் கணவர் பலியானதால் கிடைக்க வேண்டிய காப்பீட்டு தொகைக்காக மாமியாரை கூலிப்படையை ஏவி கொலை செய்த மருமகளை போலீஸார் கைது செய்தனர்.

சேலம்: விபத்தில் கணவர் பலியானதால் கிடைக்க வேண்டிய காப்பீட்டு தொகைக்காக மாமியாரை கூலிப்படையை ஏவி கொலை செய்த மருமகளை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த மாதம்மாள் என்பவரின் மகன் ராமர். இவர் ஒரு பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி.

ராமர் நாமக்கல்லில் உள்ள பேக்கரி கடையின் வேலை செய்து வருவதால் தினமும் அவர் வண்டியில் சென்று வருவார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் ராமர் உயிரிழந்தார். இதையடுத்து சாலை விபத்தில் சிக்கிய ராமரின் வாரிசுகளுக்கு இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு தொகை வழங்குவதாக கூறியிருந்தது. மாமியார் மாதம்மாள் உயிரோடு இருந்தால் தமக்கு முழுத் தொகை வராது என கருதிய ராஜேஸ்வரி, மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டார்.

அதன்படி தனது மாமியாரின் விரோதிகளை அழைத்து காப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதியை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி மாமியாரை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டு கொடுத்தார். திட்டப்படி அவர்கள் மாதம்மாளை கொலை செய்துள்ளனர். பின்னர் போலீஸார் கொலையாளிகளை பிடித்து விசாரித்ததில் இதன் பின்னணியில் ராஜேஸ்வரி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீஸார் ராஜேஸ்வரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.