கணவர்கள் எஜமானர்கள் இல்லை; சட்டப்பிரிவு 497 அரசியல் சாசனத்திற்கு எதிரானது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

கணவர்கள் எஜமானர்கள் இல்லை; சட்டப்பிரிவு 497 அரசியல் சாசனத்திற்கு எதிரானது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருமணமானவர்கள் வேறு ஒருவருடன் பாலியல் உறவு வைத்து கொள்வது குற்றமில்லை என கூறி சட்டப்பிரிவு 497 அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி: திருமணமானவர்கள் வேறு ஒருவருடன் பாலியல் உறவு வைத்து கொள்வது குற்றமில்லை என கூறி சட்டப்பிரிவு 497 அரசியல் சாசனத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டம் 497வது பிரிவின்படி, திருமணமான ஆண் வேறு ஒரு பெண்ணுடன்பாலியல் உறவில் ஈடுபட்டால் அவர் மீது வழக்கு தொடர முடியும். ஒரு பெண் வேறு ஒரு ஆணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் எந்த வழக்கும் பதிவு செய்யப்படுவதில்லை. மேலும், பெண் வேறொரு ஆணுடனான பாலியல் உறவுக்கு கணவன் சம்மதித்தாலோ அல்லது உடந்தையாக இருந்தாலோ அது குற்றமாக கருதப்படாது என இந்த சட்டப்பிரிவு கூறுகிறது. 

இந்த சட்டப்பிரிவு பாகுபாட்டுடனும், முரண்பாடுகளுடனும் உள்ளதால், 158 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என இத்தாலியில் வசிக்கும் இந்தியர் ஜோசப் சைனி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜனவரி 5ம் தேதி, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சட்டப்பிரிவு 497 என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பெண்ணின் எஜமானர் கணவன் அல்ல; ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும். 

பெண்ணின் உரிமையை நாடு கருத்தில் கொள்ள வேண்டும். சமுதாய பாரம்பரியம் எல்லாம் பிறகுதான். பெண்ணுக்கு பாலியல் உறவை தேர்வு செய்ய உரிமை உள்ளது.பெண்ணுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும். தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை.திருமணத்தை தாண்டி இருவர் உறவில் ஈடுபடுவது தவறில்லை என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.