கணவரை கொன்றுவிட்டு கொரோனா மேல் பழி சுமத்திய மனைவி !

 

கணவரை கொன்றுவிட்டு கொரோனா மேல் பழி சுமத்திய மனைவி !

வடமேற்கு டெல்லியின் அசோக் விஹாரில் 46 வயதான ஷரத் தாஸ் என்பவர் 30 வயதான மனைவி அனிதா என்பவருடன் வாழ்ந்து வந்தார். இவர் அப்பகுதியில் ஒரு சிறிய கடையை நடத்தி வந்தார்அவரது மனைவி.

டெல்லியில் கணவரை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண், அவர் கொரோனா நோய் கொன்றுவிட்டதாக நாடகம் ஆடியுள்ளார்.

வடமேற்கு டெல்லியின் அசோக் விஹாரில் 46 வயதான ஷரத் தாஸ் என்பவர் 30 வயதான மனைவி அனிதா என்பவருடன் வாழ்ந்து வந்தார். இவர் அப்பகுதியில் ஒரு சிறிய கடையை நடத்தி வந்தார்அவரது மனைவி. இந்நிலையில் மே 2 ஆம் தேதி காலையில் அனிதா அக்கம் பக்கத்தாரை அவசரமாக அழைத்தார். தன்னுடைய கணவர் திடீரென மூச்சுத திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும் அவர் கோவிட் -19 தொற்று காரணமாக இறந்திருக்கலாம் என்றும் கூறினார். அக்கம் பக்கத்தினர் தங்கள் குடியிருப்பு பகுதியில் கொரோனா வைரஸ் மரணம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

crime-scene-7.jpg

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள் அனிதாவிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணான விஷயங்களை கூறியதால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. மேலும் அண்டை வீட்டாரும் உயிரிழந்தவர் நல்ல உடல்நிலையில் இருந்ததாகவும், அவருக்கு உடல்நிலையில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். 
ஷரத் தாஸ் மரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் அனிதாவிடம் கணவரின் ’கோவிட்-19 சோதனை செய்ததற்கான மருத்துவமனை அறிக்கை கேட்டார்கள். ஆனால் ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்று அனிதா கூறவே போலீசார் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து ஷரத் தாஸ் உடலை அடக்கம் செய்வதை தடுத்து நிறுத்தி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். உடற்கூறு ஆய்வு முடிவில் ஷரத் தாஸ் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 
போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் அனிதா தனது கள்ளக்காதலன் சஞ்சய் என்பவருடன் சேர்ந்து ஷரத் தாஸை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அனிதா போலீசிடம் தெரிவிக்கையில் சஞ்சய் உடனான உறவை கணவர் கண்டித்ததால் அவரை சஞ்சயுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால்தான் மரணம் வரும் அச்சத்திற்கு நடுவே இதுபோன்ற மனைவிகளால் ஆண்களுக்கு எப்போது வேண்டுமானாலும் மரணம் வரும் என்கிறார்கள் சில அச்சமடையும் கணவர்கள்.