கணவரின் உடலை 10 ஆண்டுகளாக பிரீசரில் வைத்து பாதுகாத்த பாசமான மனைவி!

 

கணவரின் உடலை 10 ஆண்டுகளாக பிரீசரில் வைத்து பாதுகாத்த பாசமான மனைவி!

அமெரிக்காவில் இறந்த கணவரின் 10 ஆண்டுகளாக பிரீசரில் வைத்து பாதுகாத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் இறந்த கணவரின் 10 ஆண்டுகளாக பிரீசரில் வைத்து பாதுகாத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உடா மாநிலத்தின் டூயெலி நகரைச் சேர்ந்தவர் ஜீன் சவுரோன்-மாதர்ஸ் (வயது 75). இவரது கணவர் பால் எட்வர்ட்ஸ்  ஓய்வு பெற்ற ராணு படைவீரர் ஆவார்.  பால் இறந்த பின் ஜீன் மட்டும் வீட்டில் தனியாக வசித்துவந்தார். கடந்த மாதம் 22 ஆம்  தேதி ஜீன் வீட்டிற்கு வந்த ராணுவ அதிகாரிகள், அவரது விட்டில் பொதுநல சோதனையை மேற்கொண்டனர். அப்போது ஜீன் இறந்து கிடந்துள்ளார். வயது முதிர்வு காரணமாக அவர் இயற்கை எய்தியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது . இதையடுத்து வீட்டை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பெரிய அதிர்ச்சி ஒன்று காத்துக்கொண்டிருந்தது.

Body

ஜீனின் கணவரான பால் உடல் வீட்டிலிருந்த பிரீசரில் இருந்துள்ளது. அவரது உடலுடன் ஒரு கடிதமும் கண்டெடுக்கப்பட்டது.  அதில் என் மனைவி என்னை கொல்லவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. அது பால் எட்வர்சின் கையெழுத்து எனவும் அந்த கடிதம் கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுதப்பட்டது என்பதையும் காவல்துறையினர் உறுதி செய்தனர். ஜீன் பாசத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக பாலின் உடலை வீட்டுக்குள் வைத்திருந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.