கணவன் மீது கற்பழிப்பு புகார் -பலவந்த உடலுறவு பலாத்காரமாகாது-கணவனை விடுவித்த கோர்ட் ..

 

கணவன் மீது கற்பழிப்பு புகார் -பலவந்த உடலுறவு பலாத்காரமாகாது-கணவனை விடுவித்த கோர்ட் ..

பராசக்தி படத்தில் ஒரு வசனம் வரும், “இந்த நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்திக்கிறது ” என்று கலைஞர் கருணாநிதி எழுதிய வசனத்தை சிவாஜி கணேசன் பேசுவார். அதுபோல இன்று நீதிமன்றங்களில் விசித்திரமான வழக்குகள் நடைபெறுகிறது. ஒரு மணமான பெண் தன் கணவன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தான் என்று வழக்கு தொடுத்தார். ஆனால் அந்த வழக்கை  விசாரித்த கோர்ட் கணவனை விடுதலை செய்தது

பராசக்தி படத்தில் ஒரு வசனம் வரும், “இந்த நீதிமன்றம் ஒரு விசித்திரமான வழக்கை சந்திக்கிறது ” என்று கலைஞர் கருணாநிதி எழுதிய வசனத்தை சிவாஜி கணேசன் பேசுவார். அதுபோல இன்று நீதிமன்றங்களில் விசித்திரமான வழக்குகள் நடைபெறுகிறது. ஒரு மணமான பெண் தன் கணவன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தான் என்று வழக்கு தொடுத்தார். ஆனால் அந்த வழக்கை  விசாரித்த கோர்ட் கணவனை விடுதலை செய்தது.

பஞ்சாப்பை சேர்ந்த ஒரு கணவன் மனைவி வழக்கில் இப்படி விசித்திரமான தீர்ப்பை டெல்லி கோர்ட் வழங்கியுள்ளது. அந்த மனைவி தனது கணவன் தன்னிடமிருந்து 2 லட்ச ரூபாயை திருடிவிட்டதால் அவரிடமிருந்து பிரிந்து டெல்லிக்கு சென்றுவிட்டார். ஆனால் அங்கே மனைவியை தேடி வந்த கணவன் அவரிடம் நான் செய்தது தவறு, இனி அப்படி செய்யமாட்டேன் என்று கூறி, அவரோடு வாழ்ந்து வந்துள்ளார். அப்போது பலவந்தமாக அவரோடு பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.
சிலநாட்களுக்கு பிறகு தனது கணவன் திருமணத்திற்கு முன்பே பல திருட்டு வழக்கில் சிறை சென்றுள்ளார் என்று மனைவிக்கு தெரியவந்ததும், அவரிடமிருந்து நிரந்தரமாக பிரிய முடிவு பண்ணி கோர்ட்டில் அவர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்தார். வழக்கை விசாரித்த டெல்லி கோர்ட் நவம்பர் 2015 ல் இருவருக்கும் திருமணமாகிவிட்டது, ஆனால் அந்த பெண் கணவன் மீது ஜூலை 2016ல் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். எனவே ,மனைவியோடு உறவு கொண்டது கற்பழிப்பு ஆகாது என கணவரை கோர்ட் விடுதலை செய்தது .