கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறைகிறதா? இதை ஃபாலோ பண்ணுங்க பாஸ்!

 

கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் குறைகிறதா? இதை ஃபாலோ பண்ணுங்க பாஸ்!

கணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது.

கணவன் மனைவி இடையில் தோன்றும் சிறுசிறு விவாதங்களும் பல சமயங்களில் சண்டையில் முடிகிறது. இருவரிடையேயான ஈகோ பிரச்னை விவாகரத்து வரையிலும் செல்கிறது. இத்தகைய  சண்டையைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் என்ன?இந்த பிரச்னைக்கு என்னதான் தீர்வு? என்பதை தெரிஞ்சிக்கோங்க மக்களே!

  • மனைவி அல்லது கணவன் மீது அளவுக்கு அதிகமாகப் பாசம் வைத்திருந்தால் மட்டும் போதாது. வீட்டு வேலைகளைச் சரிவர பங்கிட்டு கொள்ள வேண்டும். வீட்டு சுமையையும் சமமாக பங்கிட்டு கொண்டால் பிரச்னை தீரும்.

 

  • கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வது, துணைவரின் குடும்பத்தினரைக் குறை சொல்வது போன்றவற்றை அடியோடு தவிர்த்து விடுங்கள். 

 

couple fight

 

  • கணவன் /மனைவியின் பேச்சை  காது கொடுத்து கேட்டால் போதும் பிரச்னை எவ்விதத்திலும் முளைக்காது. தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது நேரில் மனம் திறந்து பேசிக்கொள்ள வேண்டும்.

 

  • அச்சமயத்தில் ஒருவர் சொல்வதை மற்றொருவர் நன்கு கவனித்துக் கேட்க வேண்டும். 

 

  • உங்கள் மொபைல் போன்களுக்கு வாரத்திற்கு ஒருமுறையாவது நீங்கள் விடுமுறை அளித்தால் எந்த வித பிரச்னையும் பெரிதாக வெடிக்காது. 

 

mobile usage

 

  • எதிர்பாராத அணைப்பு, முத்தம் இருவரையும் அன்புத் தூண்டிலில் சிக்கவைக்கும். இதை இருவரும் பின்பற்றுங்கள். 

 

  • உடலுறவில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது, மற்றவர் தொந்தரவு செய்ய வேண்டாம். இருவருக்கும் தேவையான ஒன்று என்பதால், மற்ற பிரச்னைகளை மறந்து இதற்கும் நேரம் ஒதுக்குங்கள். 

 

 sex

 

  • தவறு நேரும்போது மன்னிப்புக் கேட்கத் தயங்கக்கூடாது. அதே நேரம் சுயமரியாதையை முழுமையாக இழக்கக்கூடாது. விட்டுக் கொடுத்தல் என்பது இருவருக்கிடையே  சமமாக இருக்க வேண்டும்.

 

cycling

 

  • தம்பதியர் அவ்வப்போது ஒன்றாக ட்ரெக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இருவரும் சேர்ந்து யோகா, பாட்டு என ஏதாவது கலையைக் கற்கலாம். இது அவர்களுக்கு இடையேயான நெருக்கத்தை  அதிகரிக்கும்.