கணவனை கொன்ற மனைவி: கழிவுநீர் தொட்டியில் சடலத்தை மறைத்து நாடகமாடியது அம்பலம்!

 

கணவனை கொன்ற மனைவி: கழிவுநீர் தொட்டியில் சடலத்தை மறைத்து நாடகமாடியது அம்பலம்!

கணவனைக் கொலை செய்து, உடலைக் கழிவுநீர் தொட்டிக்குள் மறைத்துவைத்து  மனைவி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் : கணவனைக் கொலை செய்து, உடலைக் கழிவுநீர் தொட்டிக்குள் மறைத்துவைத்து  மனைவி நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்தவர் அய்யா பிள்ளை. இவருக்கும்  நண்பர் பூராசாமியின் மனைவி பரிமளாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பூராசாமி இறந்துவிட இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். 

இந்நிலையில் அய்யா பிள்ளை கடந்த 13 ஆம் தேதி காணவில்லை என்று தெரிகிறது.அய்யா பிள்ளை குடிபோதைக்கு அடிமையானவர் என்பதால் விரைவில் வீடு திரும்பிவிடுவார் என்று உறவினர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அய்யா பிள்ளையின் உறவினர்கள் வடலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

murder

அய்யா பிள்ளை காணாமல் போன வழக்கில், போலீசார் அவரது மனைவி பரிமளாவிடம் விசாரணையை மேற்கொண்டனர். ஆனால்  பரிமளா முன்னுக்கு பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், பரிமளாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

murder

குடிபோதைக்கு  அடிமையான அய்யா பிள்ளை, அடிக்கடி மனைவி பரிமளாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று இதே போல் அய்யா பிள்ளை தகராறு செய்ய, பரிமளா அவரை தாக்கியுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அய்யா பிள்ளை நீண்ட நேரமாகியும் எழவில்லை. இதனால் பதறிப்போன பரிமளா செய்வதறியாது  திகைத்துள்ளார். அய்யா பிள்ளை இறந்து விட்டதை உறுதி செய்த பரிமளா,   வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியைத் திறந்து, அதில் அய்யா பிள்ளையின் சடலத்தைப் போட்டு மூடியுள்ளார்.பின்பு  கழிவுநீர் தொட்டியைத் திறக்கும் பகுதியை சிமெண்ட் பூசி மறைத்துள்ளார். 

murder

இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், கழிவுநீர் தொட்டியை உடைத்து அய்யா பிள்ளையின் சடலத்தை எலும்புக் கூடாக மீட்டனர். இதை தொடர்ந்து கணவனை கொலை செய்துவிட்டுக் காணாமல்போனதாக நாடகமாடிய மனைவி பரிமளாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் வாசிக்க: குக்கர் போய் கிப்ட் பேக் வந்தது..! இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்