கட்ஸ் இல்லாமல் ‘வடசென்னை’-க்கு கிடைத்த ‘ஏ’!

 

கட்ஸ் இல்லாமல் ‘வடசென்னை’-க்கு கிடைத்த ‘ஏ’!

தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ திரைப்படத்துக்கு எந்த கட்ஸும் இல்லாமல் சென்சார் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சென்னை: தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ திரைப்படத்துக்கு எந்த கட்ஸும் இல்லாமல் சென்சார் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் அக்.17ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் சென்சாருக்கு சென்ற இப்படத்தை பார்த்த அதிகாரிகள், படத்தின் கருவை உணர்ந்து, வன்முறை காட்சிகளையும், வசனங்களில் வரும் கெட்ட வார்த்தைகளையும் நீக்காமல் எந்த தடையும் இல்லாமல் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இது குறித்த அறிவிப்பை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர் சுல்தான், கிஷோர், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தனுஷ்-வெற்றிமாறனின் கனவுப்படமான ‘வடசென்னை’ படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.