கட்டுவிரியன் பாம்புகளால் சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவியதா?

 

கட்டுவிரியன் பாம்புகளால் சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவியதா?

கட்டுவிரியன் பாம்புகள் மூலம் கொரோனா வைரஸ் உருவாகி சீனாவில் காய்ச்சல் பரவியதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெய்ஜிங்: கட்டுவிரியன் பாம்புகள் மூலம் கொரோனா வைரஸ் உருவாகி சீனாவில் காய்ச்சல் பரவியதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 25 பேர் பலியாகி உள்ளதாகவும், 830 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இந்த கொரோனா வைரஸ் எந்த விலங்கிடம் இருந்து உருவாகி காய்ச்சலாக மக்களுக்கு பரவியது என்று சீனாவில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதன் முதற்கட்ட ஆய்வில் திடுக்கிடும் முடிவுகள் கிடைத்துள்ளன. அதாவது வவ்வாலை அதிகமாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் வாயிலாகதான் தற்போது பரவியிருக்கும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

coronavirus

இதற்கு முன் 6 வகையான கொரோனா வைரஸ் சீனாவில் பரவியுள்ளது. தற்போது பரவி வருவது ஏழாவது வகை கொரோனா வைரஸ் காய்ச்சலாகும். இதற்கு முன்பு பரவிய ஆறு வகையான கொரோனா வைரஸ்களும் வவ்வால்கள் மூலமாக உருவானது என்று முன்னரே மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

china

அந்த கோணத்திலேயே ஆராய்ச்சி பண்ணியபோது இந்த ஏழாவது வகையான கொரோனா வைரஸ்க்கும் வவ்வால்களே அடிப்படை காரணமாக இருந்துள்ளன. வவ்வால்களை அதிகமாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகளில் விஷம் குறைவான பாம்புகளை உயிரோடு வாங்கி சமைத்து சாப்பிடும் பழக்கம் சீனர்களிடையே உள்ளது. இதன் விளைவாகவே சீனாவில் தற்போது ஏழாவது வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கான மருந்து கண்டுபிடிக்கும் சோதனைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.