கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2000! – புதுச்சேரி அதிரடி

கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2000! – புதுச்சேரி அதிரடி

ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், மத்திய அரசும் சரி பல மாநில அரசுகளும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்திருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஊரடங்கு காரணமாக மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், மத்திய அரசும் சரி பல மாநில அரசுகளும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

construction-workers-01

வாடகை கேட்டு நிர்ப்பந்திக்க வேண்டாம் என்று கூறும் அரசுகள், மின்சார கட்டணத்தைக் கூட கட்ட வேண்டாம் என்று கூற மறுக்கின்றன. அரிசி, எண்ணெய், பருப்பு கூடுதலாக இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தாலும் அதை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவது எப்படி என்று எந்த ஒரு அரசும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ரூ.500 அக்கவுண்டில் போட்டதைப் பெரிதாக விளம்பரப்படுத்தும் போக்கே உள்ளது.

puducherry-cm-78

இந்த நிலையில் புதுச்சேரி அரசு கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணத்தை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறுகையில், “புதுச்சேரியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்” என்று கூறியுள்ளார். ஏற்கனவே பொருளாதார இழப்பைச் சமாளிக்க ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டது. மேலும் ரூ.2 ஆயிரம் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.