‘கட்டின தாலிய கழட்டி வெச்சிட்டு வருவாங்க’: வனிதாவால் சந்தைக்கடையாக மாறிய பிக் பாஸ்! 

 

‘கட்டின தாலிய கழட்டி வெச்சிட்டு வருவாங்க’: வனிதாவால் சந்தைக்கடையாக மாறிய பிக் பாஸ்! 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைக்கான புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் ஒருவரை டார்கெட் செய்து அழ வைப்பதே வழக்கமாக வைத்து உள்ளனர். கடந்த வாரம் முழுவதும்  மீராவை வெச்சி செஞ்ச ஹவுஸ் மேட்ஸ் தற்போது அந்த லிஸ்டில் மதுமிதாவை இணைத்துள்ளனர். 

இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது  மதுமிதா, அபிராமியின் முகம் சுளிக்க வைக்கும் சில செயல்பாடுகளைக் கமலின் முன்பு சொன்னது தான். அப்போது அதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழ் பெண் என எதற்காகவோ சொல்ல போய் அது வேறு மாதிரி போய் முடிந்துவிட்டது. இதனால் மக்கள் மத்தியில் மதுமிதா தமிழ்பெண் என கூறி ஓட்டு வாங்க பார்க்கிறார் என்று ஹவுஸ்மேட்ஸ் கொண்டு வந்துவிட்டனர். 

இந்த நிலையில் இன்றைக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், கடந்த வார தலைவரான வனிதா,மதுமிதாவிடம் மிகவும் கடுமையாகச் சண்டை போடுவது போல் காட்டப்பட்டுள்ளது. வனிதா கூறியதாவது, ‘ஒன்னுமே தெரியாத ஊமக்குசும்பியா இருப்பாங்க, அவங்கள தான் நம்பவே முடியாது. கட்டின தாலிய கழட்டி வச்சுட்டு வருவங்களம், ஆனா அவள தப்ப பேசுறியா’ என்று மதுமிதாவை மிகவும் கோபமாகப் பேசுகிறார். 

madhu

இதற்கு பதிலளித்த மதுமிதா, ‘அவ ரொம்ப ஓவரா பன்றானு நீங்க சொல்லலையா, நீங்க சட் அப் பண்ணுங்க’ என்று பதிலுக்கு எட்டிக்குப்புட்டியாகப் பேசி சண்டை போடுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் வனிதா பிக் பாஸ் வீடு என்பதை மறந்து விட்டு சந்தைக்கடை என்று நினைத்துவிட்டார் போல என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.