கட்டாய ஹெல்மெட்- உயர்நீதி மன்றம் அதிருப்தி

 

கட்டாய ஹெல்மெட்- உயர்நீதி மன்றம் அதிருப்தி

கட்டாய ஹெல்மெட் சட்டம் சென்னையை தவிர எங்கும் அமல்படுத்தப் படவில்லை: நீதிபதிகள்

கட்டாய ஹெல்மெட் சட்டம் சென்னையை தவிர எங்கும் அமல்படுத்தப் படவில்லை  என உயர்நீதி மன்ற நீதிபதிகள் அதிருப்தி.

இந்தியாவில் நாள் தோறும் பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் வாகன சட்டங்களை வலிமையாக்க மத்திய அரசு திட்டமிட்ட படி புதிய மோட்டர் வாகன சட்டம் கொண்டு வர பட்டது. ஆனால் சென்னையை தவிர வேறு எந்த இடங்களிலும் அமல்படுத்த படவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

 தமிழகத்தில் புதிய மோட்டர் வாகன சட்டத்தின் விதிகள் முறையாக பின்பற்ற எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உயர்நீதி மன்றம்  கேள்வி எழுப்பியுள்ளது. அதனால் ஹெல்மெட் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதி மன்றம்  தெரிவித்துள்ளது.

மேலும், சட்டத்தை அமல் படுத்துவது அதிகாரிகளின் கடமை என்றும் அரசின் பணிகளை நீதி மன்றம் நடத்த முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதன் படி 2 வாரங்களில் புதிய மோட்டர் வாகன சட்ட விதிகளை அமல் படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையை  தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.