கட்சி மாறினால் ரூ.35 கோடி, ஓட்டுப் போட்டால் ரூ.5 கோடி! – காங். எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய பா.ஜ.க

 

கட்சி மாறினால் ரூ.35 கோடி, ஓட்டுப் போட்டால் ரூ.5 கோடி! – காங். எம்.எல்.ஏ-விடம் பேரம் பேசிய பா.ஜ.க

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினால் ரூ.35 கோடி, மாநிலங்களவை தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால் ரூ.5 கோடி தருவதாக பா.ஜ.க நிர்வாகி தன்னிடம் பேரம் பேசியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

bjp-madhya pradesh

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரை பா.ஜ.க கடத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ பைஜ்நாத் குஷ்வாஹா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் மூத்த பா.ஜ.க தலைவருமான சிவ்ராஜ் சிங் சௌகான், மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், பா.ஜ.க கொறடா நரோத்தம் மிஸ்ரா ஆகியோர் அனுப்பியதாக பிரமோத் சர்மா என்பவர் என்னிடம் வந்தார். பா.ஜ.க-வுக்கு அணி மாற ரூ.25 முதல் 35 கோடி வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும் மீண்டும் எம்.எல்.ஏ-வாக்கப்பட்டு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கூறினார். அப்படி இல்லை என்றால் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க- வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தால் போதும், ரூ.5 கோடி தருகிறோம் என்று கூறினார். நான் எதுவும் வேண்டாம் என்று அவரை அனுப்பிவிட்டேன். என்னிடம் எதுவும் இல்லை என்றாலும் நான் எம்.எல்.ஏ-வாக இருக்கிறேன்… இதைவிட வேறு என்ன வேண்டும். நான் காங்கிரசில்தான் இருப்பேன். என்னை விலைக்கு வாங்க முடியாது” என்றார்.