கட்சி தனது பாதையை இழந்து விட்டது…..இனியும் பழைய காங்கிரசாக இருக்காது….. காங்கிரஸ் மூத்த தலைவர் பகீர் குற்றச்சாட்டு..

 

கட்சி தனது பாதையை இழந்து விட்டது…..இனியும் பழைய காங்கிரசாக இருக்காது….. காங்கிரஸ் மூத்த தலைவர் பகீர் குற்றச்சாட்டு..

காங்கிரஸ் தனது வழியை இழந்து விட்டது. இனியும் அது பழைய காங்கிரசாக இருக்காது என ஹிரியானா மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஹூடா தெரிவித்தார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைமை கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், அந்த கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்துக்கு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிறப்பு அந்தஸ்து நீக்கிய விவகாரத்தால் காஷ்மீரில் பிரச்சினை வருகிறதோ இல்லையோ காங்கிரஸ் கட்சிக்குள் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 

சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம்

தற்போது காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளார் அரியானாவின் பலம் வாய்ந்த காங்கிரஸ் தலைவரான பி.எஸ்.ஹூடா. ஹரியானாவில் ரோதக்கில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்ட பி.எஸ்.ஹூடா பேசுகையில், அரியானாவை சேர்ந்த நமது வீரர்கள் ஜம்மு காஷ்மீரில் உயிரை இழந்துள்ளனர். ஆகையால்  370 சட்டப்பிரிவு நீக்கத்தை நான் ஆதரிப்பேன். சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு என்னுடைய பல சகாக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கட்சி தனது வழியை இழந்து விட்டது. அது இனியும் பழைய காங்கிரசாக இருக்காது. தேசபக்தியா அல்லது சுயமரியாதையா என்று பிரச்சினை வரும் போது நான் எந்த சமரசமும் செய்ய மாட்டேன் என பேசி இருந்தார்.

காங்கிரஸ் கொடி

ஹிரியானாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் சமயத்தில், காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவர் வெளிப்படையாக அந்த கட்சியை விமர்சனம் செய்து இருப்பது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என கருதப்படுகிறது.