கட்சி கலைப்பு! ராகுல் அதிரடி உத்தரவு

 

கட்சி கலைப்பு! ராகுல் அதிரடி உத்தரவு

ராகுலை பிரதமராக்க தேவையான எண்ணிக்கையிலான எம்.பிக்களை பெற்றுத்தரும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகாவை அதிகம் எதிர்பார்த்திருந்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடந்துவருவதை, அட்வான்டேஜாக கருதியது டெல்லி வட்டாரங்கள். ஆனால், கூட்டணி அரசுதான் கர்நாடக காங்கிரசை ஆழ குழிதோண்டி புதைத்தது என்பதை காலதாமதமாக உணர்ந்துகொன்டார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 28 இடங்களில், இரண்டு இடங்களை மட்டுமே பெற முடிந்ததால், கர்நாடக காங்கிரஸ் கமிட்டியை வேரோடும் வேறடி மண்ணோடும் கலைத்து அகில இந்திய காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. ராகுலை பிரதமராக்க தேவையான எண்ணிக்கையிலான எம்.பிக்களை பெற்றுத்தரும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகாவை அதிகம் எதிர்பார்த்திருந்தது அகில இந்திய காங்கிரஸ் தலைமை. மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடந்துவருவதை, அட்வான்டேஜாக கருதியது டெல்லி வட்டாரங்கள். ஆனால், கூட்டணி அரசுதான் கர்நாடக காங்கிரசை ஆழ குழிதோண்டி புதைத்தது என்பதை காலதாமதமாக உணர்ந்துகொன்டார்கள்.

Karnataka Congress

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு குமாரசாமியையோ அவரது கட்சியையோ திட்டமுடியாது. அவர் கோவித்துக்கொண்டு பாஜகவுடன் கூட்டணிசேர்ந்துவிட்டால் மாநிலத்தில் இருக்கும் ஆட்சியும் போய்விடும் என்பதால், நடவடிக்கைகள் அனைத்தையும் தமது கட்சியுடன் மட்டும் நிறுத்திக்கொண்டது. ஒட்டுமொத்த கர்நாடக காங்கிரஸும் கலைக்கப்பட்டாலும், தலைவர் மற்றும் செயல் தலைவர் இருவர் மட்டும் தொடர்ந்து பதவியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான ரிசல்ட் பெற்றுத்தந்த மாநில கமிட்டிகளை காங்கிரஸ் டெல்லி தலைமை கலைப்பதாக இருந்தால், தமிழ்நாடு, கேரளா, மற்றும் பஞ்சாப் தவிர்த்து மற்ற மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக கலைக்க வேண்டியதுதான்!.