கட்சி உறுப்பினரின் இறப்பை கண்டுகொள்ளாத கமல்; சூலூரில் பிரசாரம் செய்ய தடைகோரி மனு?!…

 

கட்சி உறுப்பினரின் இறப்பை கண்டுகொள்ளாத கமல்; சூலூரில் பிரசாரம் செய்ய தடைகோரி மனு?!…

மே 19-ஆம் தேதி 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியலில் களமிறங்கியுள்ள கமல், தனது கட்சி சார்பாக இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரசார பணியை துவங்கினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என அக்கட்சி உறுப்பினரின் மனைவி மனு அளித்துள்ளார்.

மே 19-ஆம் தேதி 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியலில் களமிறங்கியுள்ள கமல், தனது கட்சி சார்பாக இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரசார பணியை துவங்கினார். சூலூர் பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் பாலமுருகன் என்பவர் பரப்புரைக்கு சென்ற வேளையில் உயிரிழந்தார். கமல்ஹாசன் அதனை கண்டுகொள்ளவில்லை, மரணத்துக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

kamal

தற்போது 4 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேலைகளில் கமல் பிஸியாக இருக்கிறார். இந்த 4 தொகுதிகளில், மறைந்த மக்கள் நீதி மய்யம் உறுப்பினர் பாலமுருகன் வசித்து வந்த சூலூர் தொகுதியும் ஒன்று. இந்நிலையில் பாலமுருகனின் மனைவி, கமல்ஹாசன் சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

kamal

அந்த மனுவில், தொண்டர்களை கண்டுகொள்ளாத கமல் எப்படி மக்கள் பிரச்சனையை தீர்க்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். சூலூர் பகுதியில் உள்ள மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கமல் மீது மனக் கசப்பில் இருக்கின்றனர்!