கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா…

 

கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அல்கா லம்பா…

ஆம் ஆத்மி எல்.எல்.ஏ. அல்கா லம்பா கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

2013ல் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில்  சாந்தினி சவுக்கு தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக களமிறங்கி வெற்றி வாகை சூடியவர் அல்கா லம்பா. இளம் ஆம் ஆத்மி எல்.எல்.ஏ.வான அல்கா லம்பா தீவிர கட்சி பணியால் கட்சிக்குள் மிகுந்த செல்வாக்கு பெற்றார். இந்நிலையில் சமீபகாலமாக ஆம் ஆத்மி கட்சிக்கும் அவருக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றதற்கு முதல்வர் கெஜ்ரிவால்தான் காரணம் என சமீபத்தில் அல்கா வெளிப்படையாக குற்றம் சாட்டினார். குற்றஞ்சாட்டிய சில மணி நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து அல்கா லம்பா நீக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியிலிருந்து விலக போகுவதாக கூறினார். அதற்கு, இதை அவர் பலமுறை கூறிவிட்டார். ராஜினாமா கடிதத்தை அனுப்பதற்கு ஒரு நிமிடம் ஆகும். அதனை டிவிட்டரில் அனுப்பினால் கூட ஏற்றுக்கொள்வோம் என ஆம் ஆத்மி கட்சி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அல்கா லம்பா பேசினார். இந்நிலையில் இன்று காலையில் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

அல்கா லம்பா
2020 பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் சாந்தினி சவுக் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட போவதாக அல்கா லம்பா  கூறியிருந்தார். இந்நிலையில் சோனியா காந்தியை சந்தித்து பேசியதுடன், ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அவர் காங்கிரசில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.