கடைசி நேர பயணிகளால் ரூ.25 ஆயிரம் கோடி அள்ளிய ரயில்வே…

 

கடைசி நேர பயணிகளால் ரூ.25 ஆயிரம் கோடி அள்ளிய ரயில்வே…

கடந்த 4 ஆண்டுகளில் கடைசி நேர பயணிகளால் ரயில்வேக்கு ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.

திடீரென அவசரமாக ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் பயண நாளுக்கு ஒரு நாள் முன்னதாக டிக்கெட் புக் செய்யும் திட்டம்தான் தட்கல். 1997ம் ஆண்டில் முதல் முறையாக  குறிப்பிட்ட ரயில்களில் மட்டும் தட்கல் புக்கிங்  அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்த ரயில்வே 2004ல் நாடு முழுவதும் தட்கல் புக்கிங் வசதியை விரிவுப்படுத்தியது. 

ரயில்

தட்கல் டிக்கெட்டுக்காக, இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதலாக 10 சதவீதமும், மற்ற வகுப்புகளுக்கு அடிப்படை கட்டணத்தில் இருந்து 30 சதவீதமும் கூடுதலாக செலுத்த வேண்டும். 2014ல் பிரீமியம் தட்கல் டிக்கெட் சேவை குறிப்பிட்ட ரயில்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பிரீமியம் தட்கல் டிக்கெட் விலை தட்கல் விலையை காட்டிலும் அதிகமாகும்.

கடந்த 4 ஆண்டுகளில் தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட் வாயிலாக ரயில்வேக்கு ரூ.25,392 கோடி வருவாய் வந்துள்ளது. இதில் பிரீமியம் தட்கல் டிக்கெட் விற்பனை வாயிலாக மட்டும் ரூ.3,862 கோடி ரயில்வேக்கு கிடைத்துள்ளது. 

இரண்டாம் வகுப்பு ரயில்பெட்டி

தற்போது தட்கல் திட்டம் 2,677 ரயில்களில் செயல்பாட்டில் உள்ளது. மொத்தமுள்ள 11.57 லட்சம் முன்பதிவு சீட்டுகளில் 1.17 லட்சம் சீட்டுகள் தட்கல் திட்டத்தில் புக்கிங் செய்யப்படுவதாக ரயில்வே புள்ளிவிவரம் கூறுகிறது.